சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ், "வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோர்களுக்கு வழக்கின் தன்மைக்கேற்றவாறு, 85,000 ரூபாயிலிருந்து 8 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வரை தற்சமயம் வழங்கப்பட்டு வருகிறது. இனி இத்தொகை பாதிக்கப்பட்டவர்களுக்கு குறைந்தபட்சமாக ஒரு லட்சம் ரூபாயும், அதிகபட்சமாக 12 லட்சம் ரூபாயாகவும் மாநில அரசு நிதி மூலம் உயர்த்தி வழங்கப்படும்" என்று அறிவித்தார்.
இதனை செயல்படுத்தும் விதமாக, வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குறைந்தபட்சமாக ஒரு லட்சம் ரூபாயும், அதிகபட்சமாக 12 லட்சம் ரூபாயாகவும் நிதியை உயர்த்தி வழங்கி தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) விதி 1995, (திருத்த விதிகள் 2016) விதி 12(4)-இன் பிற்சேர்க்கை-Iஇல் குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு வழக்கின் தன்மைக்கேற்றவாறு மாநில அரசின் நிதியின் மூலம் உயர்த்தி வழங்கப்படும் கருணைத்தொகை குறித்த விரிவான விவரங்கள் அடங்கிய ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: காவலர்கள் டிக்கெட் எடுக்காமல் ரயிலில் தொடர்ந்து பயணம்: கடுப்பான தெற்கு ரயில்வே நிர்வாகம்