ETV Bharat / state

கடன் தொல்லை - வருவாய் ஆய்வாளர் தற்கொலை! - Crime news

ஆவடி அருகே கடன் தொல்லை காரணமாக வருவாய் ஆய்வாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல
தற்கொலை எதற்கும் தீர்வல்ல
author img

By

Published : Jun 24, 2022, 3:31 PM IST

சென்னை: ஆவடி அருகேவுள்ள பட்டாபிராம் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர், அருண்குமார். இவர் சேப்பாக்கம் மண்டலத்தில் வருவாய் ஆய்வாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவருக்குத் திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் இவருக்கு கடன் அதிகமாக உள்ளதாகவும்; வேலையில் பதவி உயர்வு கிடைக்கவில்லை என்பதாலும் கடந்த இரண்டு நாள்களாக அவர் மன உளைச்சலில் இருந்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில் இன்று (ஜூன் 24) காலை அவர் அறையில் இருந்து வெளியே வராததால் அவரது மனைவி கதவை திறந்து பார்த்துள்ளார். அப்போது, அவர் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல
தற்கொலை எதற்கும் தீர்வல்ல

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பட்டாபிராம் காவல் துறையினர், அருண்குமாரின் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: 'நாங்க போவோம்.. இல்ல பாய விரிச்சி இங்கேயே படுப்போம்..' - அதகளம் செய்த போதை ஆசாமிகள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.