ETV Bharat / state

பள்ளிச் சத்துணவு திட்டத்தில் மாற்றமா? - சமூகநலத்துறை ஆலோசனை!

சென்னை : சத்துணவுத் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உணவில் மாற்றம் செய்ய தமிழக அரசு கருத்துக்கேட்பு கடிதத்தை துறை சார்ந்த அலுவலர்களுக்கு அனுப்பியுள்ளது.

school
author img

By

Published : Oct 13, 2019, 2:01 PM IST

தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தின் கீழ் மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த உணவினை மாணவர்கள் விரும்பி உண்ணும் வகையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மதிய உணவுத் திட்டத்தில் சில மாற்றங்களைச் செய்தார்.

அதன்படி, கடந்த 2012ஆம் ஆண்டு முதல் மாணவர்களுக்கு வெஜிடபிள் பிரியாணி, கறுப்பு கொண்டைக் கடலை , தக்காளி சாதம், கருவேப்பிலை சாதம், கீரைச் சாதம் எனப் பல வகையான சாதங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் சமூக நல ஆணையர் ஆபிரகாம் அனைத்து மாவட்ட சத்துணவுத் திட்ட நேர்முக அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ’அரசு சத்துணவு மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் பயனாளிகளுக்கு 30 ஆண்டுகளாக ஒரே சீராக வழங்கப்பட்டு வந்த உணவில் மாற்றம் செய்யப்பட்டு, தற்போது கலவை சாதங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் இந்த உணவில் சில மாற்றங்களை ஏற்படுத்த தமிழ்நாடு முழுவதும் 2 ஆயிரம் மாணவர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு மிகவும் பிடித்தமான கலவை உணவு எது? வேறு எந்த உணவு மதிய உணவாக வழங்கப்பட்டால் அவர்கள் உட்கொள்வார்கள் என அவர்களது விருப்பத்தினை பெற்று அறிக்கையாக அளிக்க வேண்டும்' என உத்தரவிட்டுள்ளார்.

school
சமூக நல ஆணையர் அபிரகாம் அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதம்

இதையும் படிங்க: திருத்தணியில் நடைபெற்ற ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணி.!!

Intro:சத்துணவு திட்டத்தில் மாற்றமா?
சமூகநலத்துறை ஆலோசனை

Body:சத்துணவு திட்டத்தில் மாற்றமா?
சமூகநலத்துறை ஆலோசனை

சென்னை,

புரட்சித்தலைவர் எம். ஜி. ஆர்.சத்துணவு திட்டத்தில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கலவை சாதத்தில் மாற்றம் செய்யலாமா? என தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு வரை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின் கீழ் மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த உணவினை மாணவர்கள் விரும்பி உண்ணும் வகையிலும், ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் சத்தான உணவுடன் மேலும் அவர்களுக்கு சத்தினை அதிகரிக்கும் வகையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மதிய உணவு திட்டத்தில் சில மாற்றங்களை அறிவித்தார்.

அதன்படி கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் மாணவர்களுக்கு வெஜிடபிள் பிரியாணி, கருப்பு கொண்டை கடலை ,தக்காளி சாதம், கருவேப்பிலை ,சாதம் கீரை சாதம் என பல வகையான சாதங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் சமூக நல ஆணையர் அபிரகாம் சத்துணவு திட்ட நேர்முக அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், அரசு சத்துணவு மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் பயன் அடைந்து வரும் பயனாளிகளுக்கு 30 ஆண்டுகளாக ஒரே சீராக வழங்கப்பட்டு வந்த சாதம் மற்றும் சாம்பார் உணவு வகையில் மாற்றம் செய்து தற்போது கலவை சாதங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன்படி திங்கள்கிழமை வெஜிடபிள் பிரியாணி மற்றும் மிளகு முட்டை, செவ்வாய்க்கிழமை கருப்பு கொண்டைக்கடலை புலவு மற்றும் தக்காளி மசாலா முட்டை, புதன்கிழமை தக்காளி சாதம் மற்றும் மிளகு முட்டை, புதன்கிழமை சாதம் சாம்பார் மற்றும் அவித்த முட்டை, வெள்ளிக்கிழமை கருவேப்பிலை சாதம் அல்லது கீரை சாதம் மசாலா முட்டை மற்றும் மிளகுப்பொடி தூள் வறுத்த உருளைக்கிழங்கு ஆகியவை வழங்கவேண்டுமென தெரிவித்துள்ளார்.
மேலும் உணவு வகைகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு வட்டாரத்தை தேர்வு செய்து ஒரு பள்ளி மையத்தில் மார்ச் 2013 முதலிலிலும், பின்னர் ஆகஸ்ட் 2014 முதல் மாநிலத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் துவக்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டம் துவக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்தநிலையில் உணவு வகைகள் அனைத்து மாணவர்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர்கள் உட்கொள்கின்றனரா? என்பதையும், அவர்களுக்கு எந்த இந்த உணவு வகைகள் மிகவும் பிடித்தமாக உள்ளது என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.
எனக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் பயன் அடைந்து வரும் 2000 மாணவர்கள் குறையாமல் தேர்வு செய்து உணவு வகைகளில் அவர்களுக்கு மிகவும் பிடித்தமான கலவை சாதம் எது என கேட்டறிந்து வரிசைப்படுத்தி அனுப்பிவைக்க வேண்டும்.
மேலும் இந்த உணவு வகைகள் தவிர வேறு எந்த உணவையும் மதிய உணவாக வழங்கப்பட்டால் அவர்கள் உட்கொள்வார்கள் என அவர்களது விருப்பத்தினை பெற்று அறிக்கையாக அளிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.