சென்னை விமான நிலையத்தில் இன்று சுங்கத் துறை அலுவலர்கள், தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். சோதனையில் இலங்கையிலிருந்து வந்த விமானப் பயணி திருச்சியைச் சேர்ந்த ஆரோக்கியமேரி (45) என்பவர் உள்ளாடைக்குள் ரூ.15 லட்சம் மதிப்புள்ள 340 கிராம் தங்கத்தை மறைத்துவைத்திருப்பது தெரியவந்தது.
அதேபோல் ராமநாதபுரத்தைச் சேர்ந்த சாகுல் அமீது (63), கடலூரைச் சேர்ந்த அபூபக்கர் (47), சிவகங்கையைச் சேர்ந்த சுந்தரபாண்டியன் (48) ஆகிய மூன்று பேரும் ரூ.48 லட்சத்து 71 ஆயிரம் மதிப்பிலான ஒரு கிலோ 100 கிராம் தங்கத்தைக் கடத்திவந்திருப்பது தெரியவந்தது.
அதன்பின் அவர்கள் நான்கு பேரிடமிருந்து மொத்தம் 63 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஒரு கிலோ 440 கிராம் கடத்தல் தங்கத்தை சுங்கத் துறை அலுவலர்கள் பறிமுதல்செய்தனர். மேலும் கடத்தலின் பின்னணி குறித்து சுங்கத் துறை அலுவலர்கள் விசாரித்துவருகின்றனர்.
இதையும் படிங்க: இலங்கை, சிங்கப்பூர், மலேசியாவிலிருந்து கடத்திவந்த ரூ.54 லட்சம் மதிப்பிலான 1 கிலோ தங்கம் பறிமுதல்