ETV Bharat / state

சென்னை விமான நிலையத்தில் ரூ. 78.5 லட்சம் மதிப்புடைய தங்கம் பறிமுதல்!

சென்னை: துபாயிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த பயணியிடமிருந்து ரூ. 78.5 லட்சம் மதிப்புடைய ஒன்றரை கிலோ தங்கத்தை சுங்கத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

ஒன்றரை கிலோ தங்கம் பறிமுதல்
ஒன்றரை கிலோ தங்கம் பறிமுதல்
author img

By

Published : Aug 22, 2020, 8:24 PM IST

கரோனா வைரஸ் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளிநாடுகளுக்கு விமானம் இயக்குவது நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டு வருவதற்காக வந்தே பாரத் திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் பிரத்யேக அனுமதியுடன் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் துபாயிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு இன்று (ஆக.22) வந்த விமான பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அலுவலர்கள் சோதனையிட்டனர்.

அப்பொழுது கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த 35 வயதுடைய நபரின் உடமையில் 10 தங்க கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதன் மொத்த எடை ஒன்றரை கிலோவாகும். அதன் மதிப்பு ரூ. 78.5 லட்சம் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை அலுவலர்கள் அதனை கடத்தி வந்த நபரை கைது செய்தனர்.

இதையும் படிங்க: ரூ.1 கோடி மதிப்புள்ள 1.773 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.