ஐதராபாத்: கடந்த 2008ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்கியது. ஏறத்தாழ 17 ஆண்டுகள் கழிந்தும் அதன் பெயரும், புகழும், ரசிகர்கள் அதன் மீது கொண்டு இருக்கும் ஆரவாரமும், ஆர்வமும் சற்றும் குறையாமல் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. பணம் கொழிக்கும் ஐபிஎல் கிரிக்கெட்டில் கலந்து கொள்ள வெளிநாட்டு வீரர்களும் அதிக ஆர்வம் காட்டுவது, உலகளவில் ஐபிஎல் தொடரை பிரபலமடையச் செய்தது.
600 மடங்கு உயர்வு:
வாழை மரத்தில் உள்ள அனைத்து பாகங்களும் எப்படி விலை போகும் என்று கூறுவது போல ஐபிஎல் தொடரை சார்ந்த அனைத்து துறைகளிலும் பிசிசிஐ நன்றாக கல்லா கட்டி வந்தது. தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமம், விளம்பரம், ஸ்பார்ன்சர்ஷிப் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் ஐபிஎல் மூலம் பிசிசிஐக்கு வருமானம் கொட்டியது.
அதேபோல் ஐபிஎல் அணிகளும் வீரர்களும் விளம்பரம் ஸ்பானர்ஷிப் மூலம் கல்லா கட்டி வந்தனர். 2008ஆம் ஆண்டு ஐபிஎல் சீசன் தொடங்கிய போது ஒவ்வொரு அணிக்கு ஏலத் தொகையாக 22 கோடியே 50 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டது. 17 ஆண்டுகளான நிலையில் தற்போது அந்த ஏலத் தொகை 600 மடங்கு அதிகரித்து உள்ளது.
முதல் சீசனில் எவ்வளவு தொகை?
2008ஆம் ஆண்டு ஐபிஎல் சீசன் தொடங்கிய போது ஒவ்வொரு அணியும் ஏலத்தில் வீரர்களை எடுக்க 22 கோடியே 50 லட்ச ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 2011ஆம் ஆண்டு அது 43 கோடியே 20 லட்ச ரூபாயாக அதிகரித்தது. தொடர்ந்து 2014ஆம் ஆண்டு 60 கோடி ரூபாயாவும், 2018ஆம் ஆண்டு 80 கோடி ரூபாயாகவும் அணிகளின் ஏலத் தொகை அதிகரித்தது.
மேலும், 2022ஆம் ஆண்டு 90 கோடி ரூபாய் என ஒவ்வொரு அணிக்கு ஏலத் தொகை நிர்ணயிக்கப்பட்டது. ஒவ்வொரு மெகா ஏலத்தின் போதும் அணிகளின் ஏலத் தொகை அதிகரித்து வந்தது. தற்போது இந்த தொகை 600 மடங்கு உயர்ந்து 120 கோடி ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அண்மையில் பெங்களூரு நடைபெற்ற ஐபிஎல் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் 2025- 27 ஐபிஎல் சீசன்களுக்கான விதிமுறைகள் வெளியிடப்பட்டன.
எவ்வளவு தொகை செலவாகும்?
இதில் ஒவ்வொரு அணியும் அதிகபட்சம் 6 வீரர்கள் வரை தக்கவைக்க அனுமதிக்கப்பட்டது. அப்படி தக்கவைக்கப்படும் வீரர்களுக்கு அதிகபட்சம் 75 கோடி ரூபாய் வரை செலவழிக்க அணிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. அதேநேரம் கடைசியாக 2022ஆம் ஆண்டு நடைபெற்ற மெகா ஏலத்தில் 4 வீரர்கள் மட்டுமே தக்கவைக்க அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அப்படி தக்கவைக்கப்படும் வீரர்களில் தரம் வாரியாக 18 கோடி ரூபாய், ரூ.14 கோடி மற்றும் ரூ.11 கோடி வரை ஊதியம் வழங்க ஐபிஎல் நிர்வாகம் அனுமதித்துள்ளது. அதிகபட்சம் 5 வீரர்களை தக்கவைக்கும் நிலையில், இறுதியில் ஒவ்வொரு அணியும் 45 கோடி ரூபாயுடன் ஏலத்தில் கலந்து கொள்ள முடியும்.
இதையும் படிங்க: இலங்கை கிரிக்கெட் வீரருக்கு ஐசிசி தடை! என்னக் காரணம்? - Sri Lanka Cricketer Banned one year