சார்ஜாவிலிருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு ஏர் அரேபியா சிறப்பு விமானம் இன்று (மே 3) வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத் துறை அலுவலர்கள் சோதனையிட்டனர்.
அப்போது பெரம்பலூரை் சோ்ந்த அஜீத்குமாா் பூமாலை (22), சென்னையை சோ்ந்த நூா்முகமது உஸ்மான் (22) ஆகிய இரண்டு பயணிகள் மீது அலுவலர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து சுங்கத் துறை அலுவலர்கள் இருவரையும் நிறுத்தி சோதனையிட்டனர். சோதனையில், அவர்களுடைய உள்ளாடைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 27 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 570 தங்க பேஸ்ட்கள் அடங்கிய பிளாஸ்டிக் குப்பிகளை பறிமுதல் செய்தனர்.
இதனைத்தொடர்ந்து, இருவரையும் கைது செய்த காவல் துறையினர், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.