குவைத்திலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில், சுங்க அலுவலர்கள் நடத்திய சோதனையில், 700 கிராம் எடையில் ரூ.20.5 லட்சம் மதிப்புள்ள
தங்கச் சாவிகள், தங்கச் சுத்தியல் ஆகியவை சிக்கியுள்ளன.
![தங்கம் பறிமுதல்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-04-gold-smuggling-script-photos-tn10015_03092019190116_0309f_1567517476_89.jpg)
இதனை சூட்கேசுக்குள் மறைத்து கொண்டு வந்த ஆந்திரா மாநிலம் சித்தூரைச் சோ்ந்த வெங்கட் ரமணா (51), மகேந்திரவால் மெட்டி (24) ஆகிய இரண்டு பயணிகளை சுங்கத்துறை அலுவலர்கள் கைதுசெய்தனர். பின்னர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.