கொரோனாவால் உலகம் முழுவதும் ஏற்றுமதி - இறக்குமதி பாதிப்படைந்துள்ளது. அதனால் தங்கத்தின் விலையும் கடந்த சில வாரங்களாக அதிகரித்துக் கொண்டேவருகிறது.
அதைத்தொடர்ந்து சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் கிராமுக்கு 35 ரூபாய் அதிகரித்து நான்காயிரத்து 216 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
அதன்படி சவரனுக்கு 280 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் தங்கத்தின் விலை 33 ஆயிரத்து 728 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியைப் பொறுத்தவரை கிராமுக்கு 50 பைசா அதிகரித்து 50 ரூபாய்க்கு விற்பனையாகிறது.