தாம்பரத்தில் காயின்ஸ் பிளஸ் என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் பங்குதாரராக உள்ள அனிதாவின் மூலம் பலர் முகவர்களாக நியமிக்கப்பட்டனர். இந்நிலையில், 700 ரூபாய் கட்டினால் 45 நாட்கள் கழித்து 4800 மதிப்புள்ள ஒரு கிராம் தங்க நாணயம் கொடுப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதனால் காயின் பிள்ஸ் நிறுவன முகவர்கள் பொதுமக்களிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி பணம் வசூல் செய்துள்ளனர். இதில் பூந்தமல்லி சேர்ந்த ஏஜென்ட் அனுராதா என்பவர் சுமார் 30 லட்சம் வரை வசூல் செய்து பணத்தைக் காயின் பிளஸ் நிறுவனத்தில் கொடுத்து உள்ளார்.
இதில் ஏஜெண்டாக பணிபுரிந்து பணம் வசூல் செய்து கொடுத்ததற்கு அனுராதாவிற்கு 40 கோல்ட் காயின் கொடுத்துள்ளனர். மேலும் பணம் கட்டிய சிலருக்கு 199 கோல்ட் காயின் கொடுத்துள்ளனர். மேலும் பணம் கட்டிய மீதம் உள்ள நபர்களுக்கு கோல்ட் காயின் வழங்காமல் காயின்ஸ் பிளஸ் நிறுவனம் காலம் தாழ்த்தி வந்துள்ளது.
இதனால் அனுராதாவிடம் பணம் கொடுத்தவர்கள் தங்கள் பணத்தை திருப்பித் தரும்படி கேட்டுள்ளனர். இதையடுத்து, காயின் பிளஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வெங்கடேசன் என்பவரிடம் அனுராதா இதுகுறித்து கேட்டபோது பணம் தர முடியாது உன்னால் என்ன செய்ய முடியுமோ செய்து கொள் என மிரட்டியுள்ளார். நீ என்னிடமிருந்து கமிஷன் வாங்கியுள்ளாய், நீயும் என்னுடன் சேர்ந்து காவல்துறையிடம் மாட்டிக் கொள்வாய் என கூறி அனுப்பியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து காயின் பிளஸ் நிறுவ உரிமையாளர் வெங்கடேசன் அடியாட்களை அனுப்பி அனுராதாவை மிரட்டியுள்ளார். மீண்டும் பணத்தைக் கேட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அனுராதா, தன்னிடம் பணம் பெற்று ஏமாற்றிய காயின்ஸ் பிளஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வெங்கடேசன் உட்பட மூன்று பேர் மீது தக்க நடவடிக்கை எடுத்து தங்கள் பணத்தை மீட்டுத் தருமாறு தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதையும் படிங்க: பெண் குரலில் பேசி ரூ.1.35 கோடியை சுருட்டிய மேட்ரிமோனி மோசடி ஆசாமி..!