சென்னை: ஃபிளை துபாய் சிறப்பு விமானம் இன்று (அக்.18) சென்னை சா்வதேச விமானநிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமானநிலைய சுங்கத்துறையினா் சோதனையிட்டனா்.
அப்போது சென்னையை சோ்ந்த பயணி ஒருவர் மீது சந்தேகம் ஏற்பட்டு மீண்டும் சோதனை செய்தனர். அந்த பயணி கொண்டு வந்த லேப்டாப் சாா்ஜரில் தங்க செயின்கள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து 285 கிராம் எடை கொண்ட தங்க செயின்கள், மற்றும் பெட்டியில் வைத்திருந்த இரண்டு ஐ போன்களையும் சுங்கத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். தங்க செயின்கள் மற்றும் ஐ போன்களின் மதிப்பு ரூ.12 லட்சம் ஆகும். கடத்தலில் ஈடுபட்ட சென்னை பயணியை அலுவலர்கள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: வீரப்பன்.. விஜய குமார்.. பட்டுக்கூடு.. நடந்தது என்ன?