ETV Bharat / state

தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு! - today latest news

Gold and Silver Rate on October 18th 2023: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.44,480க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Gold Rate on October 18th 2023
தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது.. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.44,480..
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 18, 2023, 12:12 PM IST

சென்னை: தங்கத்தின் விலையானது சர்வதேசப் பொருளாதார சுழலின் மத்தியில், கமாடிட்டி மார்க்கெட்டைப் பொறுத்து நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இது மட்டுமின்றி சர்வேதச வங்கி, சர்வதேச அரசியல் சூழல், அமெரிக்காவின் வங்கிகளின் வட்டி விகிதம் என்று பல்வேறு காரணங்களை முன்வைத்துதான் தங்கத்தின் விலையில் தினமும் ஏற்றம் இறக்கம் காணப்பட்டு வருகிறது.

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே உருவாகியுள்ள போரின் எதிரோலியாக கடந்த 8 நாட்களாக தங்கத்தின் விலை தினமும் ஏற்றம் இறக்கமாக இருந்து வருகிறது. கடந்த அக்டோபர் 6ஆம் தேதி அன்று தங்கம் விலையானது சவரனுக்கு ரூ.42,280-ஆக இருந்தது. அதைத் தொடர்ந்து அக்டோபர் 7ஆம் தேதி மதியம், இஸ்ரேல்-ஹமாஸ் இடையே தாக்குதல் தொடங்கியது. அன்றைய தினமே தங்கம் விலை அதிகரிக்கத் தொடங்கியது.

அதைத் தொடர்ந்து கடந்த இரண்டு வார காலமாக தங்கத்தின் விலையில் தினமும் ஏற்றம் இறக்கம் என்பது இருந்து கொண்டே வருகிறது. ஒரு நாள் தங்கம் விலை குறைந்தால், அடுத்த நாள் குறைந்த விலையை விட அதிக அளவிலேயே அதிகரிக்கிறது. அந்த வகையில் நேற்று (அக்-17) சவரனுக்கு ரூ.120 குறைந்த நிலையில், இன்று (அக்-18) மீண்டும் தங்கம் விலையானது அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், சென்னையில் 22-கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்-18) கிராமுக்கு ரூ.45 அதிகரித்து, ஒரு கிராம் 22-கேரட் தங்கம் ரூ.5,560-க்கும், சவரனுக்கு ரூ.360 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.44,480-க்கும் விற்பனையாகி வருகிறது. இதேபோல் வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு ரூ.1 அதிகரித்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.78-க்கும், ஒரு கிலோவிற்கு ரூ.1,000 அதிகரித்து, ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ,78,000-க்கும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கம் விலை- இன்றைய (அக்-18) நிலவரம்

  • 1 கிராம் தங்கம் (22கேரட்) - ரூ.5,560
  • 1 சவரன் தங்கம் (22கேரட்) - ரூ.44,480
  • 1 கிராம் தங்கம் (24-கேரட்) - ரூ.6,030
  • 8 கிராம் தங்கம் (24-கேரட்) - ரூ.48,240
  • 1 கிராம் வெள்ளி - ரூ.78
  • 1 கிலோ வெள்ளி - ரூ.78,000

இதையும் படிங்க: LCU-வில் லியோ இணைவது உறுதி? - உதயநிதி ஸ்டாலினின் சூசகமான ட்வீட்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.