சென்னை: சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, உலக அரசியல் சூழல், சர்வதேச கமாடிட்டி மார்க்கெட் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
இதனால் தான் தங்கத்தின் விலை தினமும் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். இந்நிலையில், சென்னையில் செப்டம்பர் மாதத்தில் தங்கத்தின் விலை குறைய ஆரம்பித்தது, அதைத் தொடர்ந்து அடுதடுத்த நாட்களில் தங்கத்தின் விலையில் பெரிதும் மாற்றம் இன்றி ஏற்றம் இறக்கம் காணப்பட்டு வந்த நிலையில் இன்று(செப்.13) ஒரே நாளில் சவரனுக்கு ரூ.320 குறைந்து விற்பனை ஆகிறது.
இன்றைய நிலவரம்: சென்னையில் 22-கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.5480-க்கும், இதேப்போல், சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.43,840 க்கும் விற்பனை ஆகிறது. வெள்ளி விலையை பொறுத்தவரையில் கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து ரூ.77-க்கும் ஒரு கிலோவிற்கு ரூ.1000 குறைந்து ரூ77,000- விற்பனை செய்யப்படுகிறது.
நேற்றைய தங்கம் விலை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (செப்.12) சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.44,160-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.5 உயர்ந்து ரூ.5520-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
44-ஆயிரத்து கீழ் குறைந்த தங்கம்: கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பல்வேறு சர்வதேச காரணங்களுடன் தங்கம் விலை குறைந்துக் கொண்ட வந்தது. அதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் மாதம் இறுதியில், மீண்டும் தங்கம் தன் வேலையை காண்பிக்க தங்கம் விலை 44-ஆயிரத்தை கடந்து விற்பனையானது.
இதையும் படிங்க:INDIA blocs coordination committee: 2024 நாடாளுமன்ற தேர்தலில் யார் யாருக்கு எத்தனை இடங்கள் - INDIA கூட்டணி முக்கிய முடிவு!