ETV Bharat / state

திடீர் இயந்திர கோளாறு: ஜெர்மனி - சென்னை லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ரத்து! - chennai news in tamil

ஜெர்மனியில் இருந்து வந்த லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், திடீர் இயந்திரக் கோளாறு காரணமாக சென்னையில் தரையிறங்காமல் மீண்டும் பிராங்க்பார்ட் நகருக்கு திரும்பிச் சென்றது.

ஜெர்மனி- சென்னை லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ரத்து
லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 2, 2023, 4:55 PM IST

சென்னை: ஜெர்மன் நாட்டின் பிராங்க்பார்ட் நகரில் இருந்து 286 பயணிகளுடன் சென்னை நோக்கி வந்த லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், திடீர் இயந்திர கோளாறு காரணமாக சென்னையில் தரையிறங்காமல் மீண்டும் பிராங்க்பார்ட் நகருக்கே திருப்பி அனுப்பப்பட்டது.

ஜெர்மன் நாட்டின், பிராங்க்பார்ட் நகரில் இருந்து சென்னை வரும் லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், தினமும் நள்ளிரவு 12:05 மணிக்கு சென்னைக்கு வரும். அதனைத்தொடர்ந்து, மீண்டும் அதிகாலை 1:55 மணிக்கு பிராங்க்பார்ட் நகருக்கு மீண்டும் புறப்பட்டு செல்லும்.

இந்நிலையில், நேற்று (அக். 1) ஞாயிறு மாலை பிராங் பார்ட்டிலிருந்து 286 பயணிகளுடன் லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் புறப்பட்டது. லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த விமானம் சென்னைக்கு வராமல் அவசரமாக பிராங்க்பார்ட் நகருக்கே திரும்பி அனுப்பப்பட்டது.

இதையும் படிங்க: "மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி" - கலைஞரின் கனவு திட்டத்தை நிறைவேற்றுவதில் சிக்கல்!

மேலும், விமானத்தில் ஏற்பட்டுள்ள இயந்திர கோளாறு உடனடியாக சரி செய்ய முடியாததால் நள்ளிரவு 12:05 மணிக்கு சென்னை வரவேண்டிய லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் விமானம் ரத்து செய்யப்பட்டது. சென்னையில் இருந்து ஜெர்மன் நாட்டின் பிராங்க்பார்ட் நகருக்கு செல்வதற்கு 278 பயணிகள் காத்திருந்தனர.

பிராங்க்பார்ட்டில் இருந்து வரவேண்டிய விமானம் வராததால் சென்னையில் இருந்து இன்று அதிகாலை 1:55 மணிக்கு புறப்பட வேண்டிய லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ரத்து செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, விமானம் ரத்து குறித்து பயணிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், தகவல் கிடைக்காத பயணிகள் பலர் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து காத்திருந்ததாக கூறப்படுகிறது. மேலும், பயணிகளிடம் சென்னை விமான நிலைய அதிகாரிகள் நிலைமையை விளக்கி திருப்பி அனுப்பினர். சென்னையிலிருந்து பிராங்க்பார்ட் நகருக்கு செல்லும் விமான செவை தடைப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர்.

இதையும் படிங்க: சேலம் அரசு மருத்துவமனை நோயாளிகள் வார்டில் இறந்தவர் உடல்.. துர்நாற்றம் வீசுவதால் தொற்று பரவும் அபாயம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.