ETV Bharat / state

மிதுனம் ராசிக்கு புத்தாண்டு பலன் 2024; தேர்ந்தெடுக்கும் அனைத்து துறையிலும் வெற்றிதான்! - புத்தாண்டு கொண்டாட்டம்

Gemini New Year Rasipalan: 2024ஆம் ஆண்டில் மிதுன ராசிக்காரர்களுக்கான பலன்களைப் பார்க்கலாம்.

2024 Aries Rasipalan in Tamil
2024ம் ஆண்டில் மிதுன ராசிக்காரர்களின் ராசி பலன்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 31, 2023, 7:35 PM IST

சென்னை: மிதுன ராசிக்காரர்களே, இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே சற்று கோபத்துடன் இருப்பீர்கள். உங்கள் உறவை முழுமையாகப் புரிந்து கொள்ளாததால், அடிக்கடி பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடலாம். திருமணமானவர்கள் தங்கள் குடும்ப வாழ்க்கைக்கென போதுமான நேரத்தைச் செலவிட வேண்டும். இல்லையெனில், உங்கள் வாழ்க்கைத்துணையின் கோபத்திற்கு ஆளாகி, அதைச் சமாளிக்க முடியாமல் போய்விடும்.

வாழ்க்கைத்துணையின் உடன்பிறந்தவர்களும், சொந்தங்களும் உங்களுக்கு மிகவும் உதவியாக இருப்பார்கள். அவர்கள் உங்களுக்கு அதிர்ஷ்டமளிப்பவர்களாக மாறலாம். அவர்களுடன் சேர்ந்து செயல்பட்டால் வெற்றி பெறுவீர்கள். இந்த ஆண்டு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இந்த ஆண்டு வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும் உங்கள் லட்சியமும் நிறைவேறும். வெளிநாட்டு வியாபாரம் லாபகரமாக இருக்கும். சர்வதேச தொடர்புகளைக் கொண்டிருப்பது உங்கள் வருமானத்தை அதிகரிக்கவும், செல்வ வளத்தை அதிகரிக்கவும் உதவும். உடன்பிறந்தவர்கள் உங்களை நேசிப்பார்கள். ஆனால் குடும்பத்தில் சில குழப்பங்கள் இருக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலை குறையலாம்.

வேலையில் மிகவும் பிஸியாக இருப்பதால், உங்கள் குடும்பத்திற்காக நேரத்தை ஒதுக்க முடியாமல் போகலாம். நண்பர்கள் யார்? எதிரிகள் யார்? என்பது இச்சமயம் வெட்டவெளிச்சமாகும். நண்பர்கள் உங்களுடன் நின்று உங்களின் பெரிய பிரச்சினைகளைத் தீர்ப்பதில் உங்களுக்கு உதவுவார்கள். மாணவர்கள் தங்கள் படிப்புத்துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களிடம் உதவி பெறுவார்கள், சில வெற்றிகளையும் பெறுவார்கள்.

பணிபுரியத் தேர்ந்தெடுக்கும் எந்த துறையிலும் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். வருட நடுப்பகுதியில் உங்கள் பெற்றோரின் உடல்நலத்தில் கவனம் கொள்ள வேண்டும். சகோதர சகோதரிகளுக்கு மேலதிகமாக அலுவலக சக பணியாளர்கள் உதவுவார்கள். அதீத நம்பிக்கையில் ஈடுபடாமல் கவனமாக இருக்க வேண்டும். தனிப்பட்ட தகவல்களை யாரிடமாவது பகிர்ந்துகொண்டால் நீங்கள் பிரச்சனைகளில் சிக்கலாம்.

இதையும் படிங்க: ரிஷபம் ராசிக்கு புத்தாண்டு பலன் 2024; எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.