ETV Bharat / state

விசிகவில் இணைகிறாரா காயத்ரி ரகுராம்?

author img

By

Published : Feb 22, 2023, 2:32 PM IST

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உடன் காயத்ரி ரகுராம் சந்தித்து பேசிய நிகழ்வைத் தொடர்ந்து, விசிகவில் காயத்ரி இணைய உள்ளாரா என்ற கேள்வி அரசியல் விமர்சகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

விசிகவில் இணைகிறாரா காயத்ரி ரகுராம்?
விசிகவில் இணைகிறாரா காயத்ரி ரகுராம்?

சென்னை: பாரதிய ஜனதா கட்சியில் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் தலைவராக பதவி வகித்து வந்த காயத்ரி ரகுராம், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக அக்கட்சியில் இருந்து விலகினார். பின்னர் பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்றும், அண்ணாமலை பாஜகவின் தலைவராக இருக்கத்தகுதி இல்லாதவர் என்றும் காயத்ரி கூறியிருந்தார்.

இதுதொடர்பாக தொடர்ந்து சமூக வலைதளங்களில் அண்ணாமலை குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை காயத்ரி முன்வைத்து வருகிறார். இந்த நிலையில், காயத்ரி ரகுராம் நேற்று (பிப்.21) விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

  • அம்பேத்கர் திடலுக்கு வந்த @Gayatri_Raguram அவர்களுக்கு 'உலக வரலாற்றில் பெண்கள்' எனும் நூலைப் பரிசாக அளித்தேன். அன்னை சாவித்திரிபாய் ஃபுலே அவர்களின் சகிப்புத் தன்மையும் ஜெயலலிதா அம்மையாரின் போர்க் குணமும் பொதுவாழ்வில் ஒவ்வொரு பெண்மணிக்கும் தேவை என்பதைச் சொல்லி அவரை வாழ்த்தினேன். pic.twitter.com/K0GIYwLIWT

    — Thol. Thirumavalavan (@thirumaofficial) February 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதனையடுத்து காயத்ரி ரகுராம் உடனான சந்திப்பு குறித்து திருமாவளவன், "அம்பேத்கர் திடலுக்கு வந்த காயத்ரிக்கு 'உலக வரலாற்றில் பெண்கள்' எனும் நூலைப் பரிசாக அளித்தேன். அன்னை சாவித்திரிபாய் ஃபுலே அவர்களின் சகிப்புத் தன்மையும், ஜெயலலிதா அம்மையாரின் போர்க் குணமும் பொதுவாழ்வில் ஒவ்வொரு பெண்மணிக்கும் தேவை என்பதைச் சொல்லி அவரை வாழ்த்தினேன்.

கருத்தியல் முரண்களைக் கடந்து, மனித உறவுகளுக்கான மாண்புகளைப் போற்றுவது சிறுத்தைகளின் சிறப்பாகும். அம்பேத்கர் திடலுக்கு வருகை தந்த காயத்ரி ரகுராமை வரவேற்றுச் சிறப்பித்தோம். ஏப்ரல் 14 - அம்பேத்கர் பிறந்தநாளில் அவர் தொடங்க இருக்கும் சக்தியாத்ரா வெற்றி பெற வாழ்த்தினோம்" என ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள காயத்ரி ரகுராம், "எதிர்பாராத மனிதர்கள் எனக்கு உதவியபோது விசிக தலைவர் எம்.பி. திருமாவளவனுக்கும், விசிகவுக்கும் எனது நன்றிகள். ஆதரவு அளித்ததற்கு நன்றி. மரியாதை நிமித்தமான அற்புதமான சந்திப்பு" என தெரிவித்துள்ளார்.

  • எதிர்பாராத மனிதர்கள் எனக்கு உதவியபோது 🙏
    வி.சி.க. தலைவர், எம்.பி., அண்ணா திரு.தொல் திருமாவளவன் அவர்களுக்கும், வி.சி.க.வுக்கும் எனது நன்றிகள். ஆதரவு அளித்ததற்கு நன்றி.

    மாரியாதை நிமித்தமான அற்புதமான சந்திப்பு 🙏

    .@thirumaofficial pic.twitter.com/3dDB01sxGF

    — Gayathri Raguramm 🇮🇳 (@Gayatri_Raguram) February 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ஏற்கனவே காயத்ரி ரகுராம் பாஜகவில் இருந்தபோது, திருமாவளவனை கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். அப்போது திருமாவளவனும் காயத்ரியை விமர்சனம் செய்தார். ‘திருமாவளவன் என்னை விமர்சனம் செய்தது தவறு’ என்று அவரே ஒரு நிகழ்வில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இருப்பினும், தற்போதைய திருமாவளவன் - காயத்ரி ரகுராம் சந்திப்பைத் தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் காயத்ரி இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே இது குறித்து பேசிய காயத்ரி, 'நான் பாஜவை தவிர்த்த மற்ற கட்சியில் இணைய இருக்கிறேன்' என்றும், குறிப்பாக 'திமுக மற்றும் விசிக-வில் அழைப்பு வந்தால் இணைந்து பணியாற்றத் தயாராக இருக்கிறேன்' எனவும் விளக்கம் அளித்துள்ளார்.

இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: அடுத்தடுத்து டார்கெட் செய்யப்படும் நாதக வேட்பாளர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.