ETV Bharat / state

கேஸ் சிலிண்டர் விலை உயர்வு: திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு - “நிவர்” புயல்

கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து, திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி தலைமையில் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரில் டிசம்பர் 21ஆம் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக தலைமை அறிவித்துள்ளது.

கேஸ் சிலிண்டர் விலை உயர்வு: திமுக சார்பில் ஆர்பாட்டம்

author img

By

Published : Dec 17, 2020, 3:06 PM IST

சென்னை: சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து, திமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் டிசம்பர் 21ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கரோனா காலத்திலும், 15 நாட்களில் 100 ரூபாய்க்கு மேல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்தும் - அதனை திரும்பப் பெற வலியுறுத்தியும் மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி, எம்.பி., தலைமையில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் டிசம்பர் 21 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்திய பாஜக அரசு 15 நாள் இடைவெளிக்குள் இருமுறை கேஸ் சிலிண்டர் விலையை 100 ரூபாய் உயர்த்தியிருப்பதும், தொடர்ச்சியாக அதன் விலையை உயர்த்தி வருவதும், இந்திய குடும்பங்களின் “குடும்ப வரவு செலவுக் கணக்கில்” கடும் பற்றாக்குறை நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.

“நிவர்” புயல் பாதிப்பில், பல்வேறு மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்தும் - அரசின் நிவாரண உதவி எதுவும் வந்தடையாமலும், பல்வேறு பிரச்னைகளால் சூழப்பட்டு, மிகுந்த தவிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

கடந்த மே மாதத்திலிருந்து ஐந்து முறை கேஸ் சிலிண்டர் விலையை ஏற்றியுள்ள மத்திய பா.ஜ.க. அரசு- இப்போது 15 நாள் இடைவெளியில் 50 ரூபாய் என இரு முறை உயர்த்தி- ஒரு கேஸ் சிலிண்டரின் விலையை 710ஆக அதிகரித்திருப்பது மக்களை நிலை குலைய வைத்துள்ளது. கரோனா காலத்தில் கிடைக்கின்ற சொற்ப வருவாயைக் கொண்டு, சிக்கனமாகக் குடும்பத்தை நடத்த வேண்டிய கடுமையான கட்டாயத்தில் இருக்கும் தாய்மார்களுக்கு, இந்த விலை உயர்வு தாங்க முடியாத பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது.

கேஸ் சிலிண்டர் விலை உயர்வை எதிர்த்து ஆர்ப்பாட்டம்:

கேஸ் சிலிண்டர் விலை, அத்தியாவசியப் பொருள்களின் விலை எல்லாமே மத்திய பா.ஜ.க. ஆட்சியிலும் - அதிமுக ஆட்சியிலும் விஷம் போல ஏறிக் கொண்டிருக்கிறது. ஆகவே ஒவ்வொரு இல்லத்திலும் பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ள 100 ரூபாய் கேஸ் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்தும்; இந்த விலை உயர்வை உடனே திரும்பப் பெற வலியுறுத்தியும்; மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக, வருகின்ற 21.12.2020 திங்கட்கிழமை அன்று மாலை 3.30 மணி அளவில், திராவிட முன்னேற்றக் கழக மாநில மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம், அமைதியான முறையில் அற வழியில், நடைபெறும்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: இந்திய வரலாற்றில் முதல்முறையாக... சிபிஐ அமைப்பு மீதே வழக்குப்பதிவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.