ETV Bharat / state

Cyber Crime: இந்த எண்களில் இருந்து அழைப்பு வந்தால் எடுக்க வேண்டாம்.. எச்சரிக்கும் சைபர் கிரைம் போலீஸ்!

வெளிநாட்டு எண்ணிலிருந்து வாட்ஸ்அப் கால் மூலம் அழைத்து லிங்குகள் மூலம் தகவல்கள், வங்கிக் கணக்குகளில் இருந்து பணம் ஆகியவைகளை நூதன முறையில் மோசடி செய்து வருவதால் எச்சரிக்கையுடன் இருக்கும் படி தமிழக சைபர் கிரைம் பிரிவு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

gangs indulging in money scam through WhatsApp from foreign numbers Cybercrime police warning
வெளிநாட்டு எண்களில் இருந்து whatsapp மூலம் தொடர்பு கொண்டு நூதன மோசடி
author img

By

Published : May 11, 2023, 12:27 PM IST

சென்னை: சமீபகாலமாக சமூக வலைதளங்களில் பொதுமக்கள் வெளிநாட்டு whatsapp கால் மோசடி நடைபெறுவதாக பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக +84, +62, +63, +212, +917 ஆகிய எண்ணில் தொடங்கிய மலேசியா, கென்யா, எத்தியோபியா, வியட்நாம் போன்ற நாடுகளின் எண்களில் இருந்து பல்வேறு அழைப்புகள் whatsapp மூலமாக வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். இது போன்ற தெரியாத whatsapp எண்ணில் இருந்து வரும் வெளிநாட்டு கால்களை பொதுமக்கள் நம்பி ஏமாற வேண்டாம் என தொடர்ந்து சமூக வலைதளத்தில் பதிவுகள் அதிகரித்து வருகின்றன.

இதுகுறித்து தமிழக சைபர் கிரைம் பிரிவு போலீசாருக்கு கவனம் சென்றதை அடுத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். குறிப்பாக லிங்கிடு இன், பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதள பக்கத்தின் மூலமாக நட்பாக பழகி வெளிநாட்டிலிருந்து பேசுவது போல் வாட்ஸ் அப் கால் மூலமாக மோசடி செய்வதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக முதலில் நட்பாகப் பேசி பரிசு பொருள் அளிப்பதாக தெரிவித்து, பின்பு விலை மதிப்பு அதிகம் உள்ள பொருள் அனுப்பப்படுவதாகவும், அந்த விலைமதிப்பு அதிகம் உள்ள பொருள் விமானம் மூலம் வந்தடைந்ததாக கூறி விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் அல்லது அரசு அதிகாரிகள் போல் பேசி, சம்பந்தப்பட்ட பொருட்களுக்கான வரி செலுத்த வேண்டும் எனக்கூறி மோசடி செய்வதாகவும் போலீசார் எச்சரித்துள்ளனர். இவ்வாறாக 110 புகார்கள் இந்த ஆண்டு மட்டும் வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் பல்வேறு லோன் செயலிகள் மூலமாக ஐயாயிரம் வரை பணம் பெற்றவர்கள் அந்தச் செயலியை பதிவிறக்கம் செய்யும்பொழுது செல்போனில் உள்ள டேட்டாக்களை பயன்படுத்துவதற்கான அனுமதியை பொதுமக்கள் தந்து விடுவதால் அதை பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுவதாகவும் தெரிவித்துள்ளனர். குறிப்பாக லோன் செயலியின் மூலம் கடன் பெற்றவர்கள் செல்போனில் வைத்திருக்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் செல்போன் எண்களை திருடி ஆபாசமாகவும் மிரட்டும் வகையிலும் பேசி பணத்தைப் பறிப்பதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் உறவினர்களை ஆபாசமாக சித்தரித்து whatsapp மூலமாக புகைப்படங்களை அனுப்பி தொடர்ந்து மிரட்டல் விடுக்கும் இது போன்ற சைபர் கிரைம் கும்பல்கள் வெளிநாட்டில் இருந்து அழைப்பது போல், வெளிநாட்டு எண்களில் whatsapp மூலமாக கடன் வாங்கியவர்களை தொடர்பு கொண்டு மிரட்ட பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர். ஆனால் அவை யாவும் உண்மையாக வெளிநாட்டிலிருந்து வரும் அழைப்புகள் அல்ல என்பதையும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

gangs indulging in money scam through WhatsApp from foreign numbers Cybercrime police warning
வெளிநாட்டு எண்களில் இருந்து whatsapp மூலம் தொடர்பு கொண்டு நூதன மோசடி

இவ்வாறாக கடன் செயலிகள் மூலமாக பாதிக்கப்பட்டவர்கள் வெளிநாட்டு எண்ணில் இருந்து வரும் மிரட்டல் கால்கள் தொடர்பாக 1600 புகார்கள் இந்த வருடம் வந்திருப்பதாகவும் சைபர் கிரைம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இவ்வாறு தெரியாத வெளிநாட்டு எண்ணில் இருந்து வரும் வாட்ஸப் கால்கள் மற்றும் குறுஞ்செய்திகள் whatsapp குறுஞ்செய்திகள் ஆகியவற்றில் வரும் லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம் எனவும் சைபர் கிரைம் பிரிவு அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.

அவ்வாறு கிளிக் செய்யும் போது செல்போனில் உள்ள டேட்டாக்கள் மற்றும் வங்கி கணக்கு தொடர்பான டேட்டாக்களை திருடி பணம் மோசடி செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் whatsapp கால் மூலமாக மோசடியில் ஈடுபடும் கும்பலிடன் எச்சரிக்கையாக இருக்கும்படி சைபர் கிரைம் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: பெண் உளவாளியின் நிர்வாணப் படத்திற்காக பிரம்மோஸ், அக்னி ரகசியம் கசிவு - DRDO இயக்குநர் மீது குற்றச்சாட்டு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.