ETV Bharat / state

ஏடிஎம் கொள்ளை கும்பலின் தலைவன் கைது - சென்னை அழைத்து வந்த போலீசார் - சென்னை அழைத்து வந்த போலீசார்

ஏடிஎம் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான சவுகத் அலி என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர்.

Gang leader of atm robbers arrested
Gang leader of atm robbers arrested
author img

By

Published : Jul 3, 2021, 1:55 AM IST

Updated : Jul 3, 2021, 6:51 AM IST

சென்னை: எஸ்பிஐ வங்கி ஏடிஎம் கொள்ளை சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முக்கிய குற்றவாளியான கொள்ளை கும்பலின் தலைவன் சவுகத் அலியை தனிப்படை போலீசார் ஹரியானாவில் கைது செய்து விமானம் மூலம் சென்னை அழைத்து வந்தனர்.

சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம். மையங்களை குறிவைத்து ரூ.1 கோடிக்கு மேல் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. வங்கி ஏ.டி.எம். மையங்களில் பணம் செலுத்தும் எந்திரங்களின் வாயிலாக நூதன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த 10 கொள்ளையர்கள் இந்த கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றி இருந்தனர்.

சிசிடிவி காட்சிகளின் பதிவுகளை வைத்து சென்னை போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், அவர்கள் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்கள் என தெரிய வந்ததையடுத்து, தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் ஹரியானா சென்றனர்.

ஏடிஎம் கொள்ளை கும்பலின் தலைவன் கைது
இந்த கொள்ளை வழக்கில் அமீர், விரேந்தர், நசீம் உசைன் என்பவர்களை தனிப்படை போலீசார் கைது செய்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் காவலில் எடுத்து தொடர்ந்து விசாரணை நடத்தி பல்வேறு தகவல்களைத் திரட்டி வருகின்றனர்.இந்தநிலையில், முக்கிய குற்றவாளியான சவுகத் அலி என்பவரை ஹரியானாவில் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர்.

இதையும் படிங்க: ஹரியானாவில் ஆக்ஸிஜன் ஆலையாக மாறிய வீடு!

Last Updated : Jul 3, 2021, 6:51 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.