ETV Bharat / state

தனியார் மருத்துவக் கல்லூரியில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை - ககன்தீப்சிங் பேடி - மருத்துவ கல்லூரி ராகிங்

Private medical college fees: தனியார் மருத்துவக் கல்லூரியில் அரசு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக வசூல் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 1, 2023, 5:54 PM IST

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி அளித்த பேட்டி

சென்னை: சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பில் முதலாம் ஆண்டில் சேர்ந்த மாணவர்களுக்கு வெள்ளையங்கி அணிவிக்கும் விழா நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

எம்பிபிஎஸ் படிப்பில் முதலாம் ஆண்டில் சேர்ந்த மாணவர்களுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி இனிப்பு, ரோஜாப்பூ மற்றும் வெள்ளையங்கி வழங்கினார் . மேலும், மாணவர்கள் கல்லூரியில் ராகிங் போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது எனவும், ராகிங் செய்வதை தடுப்பதற்கு அமைக்கப்பட்டுள்ள குழுக்கள் குறித்த கையேட்டையும் வழங்கினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் ககன்தீப்சிங் பேடி, ”எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் மாணவர்களுக்கான 2 சுற்றுக் கலந்தாய்வு முடிந்துள்ளது. மாணவர்கள் 4ஆம் தேதிக்குள் கல்லூரியில் சேர வேண்டும். 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட இடங்கள் நிரம்பி உள்ளது. 3ஆம் சுற்றுக் கலந்தாய்வு செப்டம்பர் 5ஆம் தேதிக்கு பின்னர் அகில இந்திய கலந்தாய்வின் அடிப்படையில் நடத்தப்படும்.

முதலாம் ஆண்டு மருத்துவ மாணவ, மாணவிகளுக்கு வெள்ளையங்கி அணிவிக்கும் விழா நடைபெற்றது. பின்னர் மருத்துவ நிர்வாகம் மூலமாக மாணவ, மாணவிகளுக்கு மருத்துவத் துறையில் எவ்வாறு செயலாற்ற வேண்டும் என்ற உறுதிமொழி எடுக்கப்பட்டது.

சென்னை மருத்துவ கல்லூரி மட்டுமல்லாது தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் இன்று முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணியும் விழா நடைபெற்ற வருகிறது. கல்லூரிகளில் ராகிங் நடக்காது. அதை மீறியும் நடந்தால், மாணவர்களை நிர்வாகம் நிச்சயம் இடைநீக்கம் செய்யும். 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில், குறிப்பாக தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆசிரியரை நியமித்து சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் என கல்லூரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் நலமாக உள்ளார். அவருக்கு இருதய பாதிப்பு இருக்குமா என்பதற்கான ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டது. அது போன்று இப்போது எதுவும் இல்லை. மருத்துவக் கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலிக்கிறார்கள் என புகார் வந்தால், மாணவர் சேர்க்கை தேர்வு குழு மூலமாக அக்கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து மின்னஞ்சல் மூலமாக புகாரளிக்கலாம். அதன் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும்.

தேசிய மருத்துவ கமிட்டி அறிவுறுத்தல்படி, முதுநிலை மருத்துவம் படிக்கும் மாணவர்கள் மூன்று மாதம் பயிற்சி மருத்துவராக மருத்துவமனைகளில் வேலை செய்ய வேண்டும். அவர்கள் பயிற்சியில் இருந்தாலும் மருத்துவர்கள்தான்.

தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 36 மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர் கலந்தாய்வு முடிந்து விட்டது. நீதிமன்றத்தின் அனுமதி கிடைத்தவுடன், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் உள்ள காலியிடங்கள் நிரப்பப்படும். தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் காலிப் பணியிடங்களை நிரப்பும் பணிகள் நடைபெற்று கொண்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கு அரசால் நிதி ஒதுக்கப்படுகிறது. ஆகவே, அந்தந்த மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ வசதியானது மேம்படுத்தப்படும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: சென்னையில் 3 நாட்களுக்கு பிறகு குறைந்த தங்கம் விலை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.