ETV Bharat / state

விருத்தாசலத்தில் வெற்றிப் புள்ளியோடு தொடங்கிய தேமுதிக கடந்து வந்த பாதை! - Vijayakanth Journey

History of DMDk Party: 2006ஆம் ஆண்டு நடிகர் விஜயகாந்த் தொடங்கிய தேசிய முற்போக்கு திராவிட கழகம் கடந்து வந்த பாதையை இச்செய்தித் தொகுப்பில் காணலாம்.

கேப்டன் விஜயகாந்த்
கேப்டன் விஜயகாந்த்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 28, 2023, 4:01 PM IST

சென்னை: நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக இன்று (டிச.28) காலமானார். இன்று அதிகாலை அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தேமுதிகவின் எழுச்சி: தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சியை 2005ஆம் ஆண்டில் விஜயகாந்த் மதுரையில் ஒரு மாநாட்டை நடத்தி தொடங்கினார். அப்போது தமிழகத்தில் இருந்த திமுக, அதிமுக என்ற திராவிட கட்சிகளுக்கு இடைய ஒரு புதிய மாற்றாக தேமுதிக அமைந்திருந்தது. இரண்டு திராவிடக் கட்சிகள் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும் என்ற இருந்த இடத்தில், திமுக மற்றும் அதிமுகவுக்கு மாற்றாக வந்திருப்பதாக விஜயகாந்த் அன்று அறிவித்திருந்தார்.

அதன் பின், கடந்த 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் மற்றும் 2009 மக்களவைத் தேர்தல்களில் கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிட்டு தனக்கென்று தொண்டர்களையும் மற்றும் வாக்காளர்களையும் தேமுதிக தக்கவைத்துக் கொண்டிருந்தது. தேமுதிக கட்சி ஆரம்பித்து ஒரே ஆண்டில் சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு, விருத்தாச்சலம் தொகுதியில் அபார வெற்றி பெற்று, விஜயகாந்த் சட்டப்பேரவையில் நுழைந்தார்.

அதுவரை யாருடனும் கூட்டணி வைக்காமல் தனித்து போட்டியிட்டு வந்த தேமுதிக, 2011ஆம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி வைத்து 29 தொகுதிகளில் வென்று எதிர்கட்சியாக அமர்ந்தது. மேலும் எதிர்கட்சித் தலைவராக இருந்த விஜயகாந்த், தமிழகத்தில் சிறந்த எதிர்கட்சித் தலைவராக, அப்போதைய முதலமைச்சராக இருந்த ஜெ.ஜெயலலிதாவிடம் துணிச்சல் உடன் தன்னுடைய கேள்விகளையும், பதில்களையும் பதிவு செய்தார்.

அதிமுகவுடன் கூட்டணி: 2009 மக்களவைத் தோ்தலில் அதிமுகவுடன் மதிமுக, இடதுசாரிகள் அணி சேர்ந்திருந்தது. அந்த நேரத்தில் தன்னிச்சையாக போட்டியிட்டு, தேமுதிக தனது முந்தைய வாக்கு வங்கியை 10.11 சதவீதமாக உயர்த்தியது. அப்போது, அதிமுக வாக்கு வங்கி தேமுதிகவால் பாதிக்கப்பட்டிருந்ததை நுட்பமாக அறிந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, 2011 சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக - தேமுதிக கூட்டணியை உருவாக்கி மிகப்பெரிய வெற்றியை உருவாக்கினார்.

தேமுதிகவிடம் சென்ற அதிமுகவின் வாக்கு வங்கி, மீண்டும் அதிமுகவை வந்தடைய இந்த கூட்டணி பாலமாக அமைந்தது. இந்த தேர்தல் வெற்றிக்குப் பிறகு, விஜயகாந்துக்கும் எதிர்கட்சித் தலைவர் பதவி கிடைத்தது. அதன் பிறகு ஏற்பட்ட அரசியல் சம்பவங்களால், 2014 மக்களவைத் தேர்தல், 2016 பேரவைத் தேர்தல், 2019 மக்களவைத் தேர்தல் என மூன்று தேர்தல்களில் கூட்டணி அரசியலில் ஈடுபட்டதால், தேமுதிவுக்கு கிடத்த தன்னிச்சையான ஓட்டு சதவீதம், சீட்டுக்கட்டை போல் சரியத் தொடங்கியது.

தேமுதிகவின் வீழ்ச்சி: தனித்துப் போட்டியிட்டுக் கொண்டிருந்த தேமுதிக , 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து போட்டியிட முடிவு செய்தது. தேமுதிகவுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதில் தேமுதிக 29 இடங்கள் மற்றும் 7.9 சதவீத வாக்குகளையும் பெற்றது. தமிழ்நாட்டின் சட்டமன்ற எதிர்கட்சியாகவும் உருவெடுத்தது. பெரிய கட்சியான திமுகவையும் பின்னுக்குத் தள்ளியது.

2011 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் இருந்த கூட்டணியானது, நீண்ட காலத்திற்கு நீடிக்கவில்லை. அந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக-வால் அதிமுக வெற்றி பெற்றதா, அதிமுகவால் தேமுதிக வெற்றி பெற்றதா என்ற மோதல் விஸ்வரூபம் எடுத்தது. அப்போது ஜெயலலிதா, சங்கரன்கோவில் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தனித்து நின்று வெற்றி பெறும் என சட்டமன்றத்தில் கூறினார்.

இதற்கு பதில் அளித்த விஜயகாந்த், இடைத்தேர்தலில் ஆளும் கட்சி எப்படி வெற்றி பெறும் என்பது பற்றி அனைவருக்கும் தெரியும் எனக் கூறினார். இதன் காரணமாக இரு தரப்புக்கும் மோதல் சட்டப்பேரவையில் வெடித்தது. அப்போது அதிமுகவினர் கூச்சல் எழுப்பியதால் ஆவேசமடைந்த விஜயகாந்த் நாக்கை துருத்தி எச்சரித்தார். இந்த சம்பவம் அரசியலில் பெரும் பேசுபொருளாக தற்போது வரை இருந்து வருகிறது.

இந்த சம்பவத்திற்குப் பிறகு, தேமுதிக - அதிமுக கூட்டணி முறிந்து விட, 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது பாஜக மற்றும் மதிமுகவுடன் இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் தேர்தலைச் சந்தித்தது, தேமுதிக. அந்தக் கூட்டணியில் 14 இடங்களில் போட்டியிட்ட தேமுதிக, அனைத்து இடங்களிலும் தோல்வி அடைந்தது. அப்போது பதிவான வாக்குகளில் 5.1 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தது. இதற்குப் பிறகும் தேமுதிக தொடர்ந்து சரிவைச் சந்தித்தது.

அதனைத் தொடர்ந்தது, 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரில் மதிமுக, இடதுசாரி கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் இணைந்து 104 இடங்களில் போட்டியிட்ட தேமுதிக, ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை. அக்கட்சி பெற்ற வாக்குகளின் சதவீதம் 2.41 சதவீதமாக குறைந்திருந்தது. இதற்குப் பிறகு 2019, 2021ஆம் ஆண்டுத் தேர்தல்களில் கட்சியின் செல்வாக்கும், வாக்கு சதவீதமும் மேலும் வீழ்ச்சியடைந்தன.

அதன் பிறகு, தேமுதிகவின் முகமாக பார்க்கப்பட்டு, அரசியலில் வளர்பிறையாக இருந்து வந்த விஜயகாந்த், உடல் நலக்குறைவால் தேய்பிறையாக மாறி வந்தார். தேமுதிக தொடங்கப்பட்டதில் இருந்து அக்கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருந்து வந்த பிரேமலதா விஜயகாந்த், 2018ஆம் ஆண்டில் அக்கட்சியின் பொருளாளராக நியமிக்கப்பட்டார்.

அண்மையில் நடைபெற்ற தேமுதிகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் கட்சியின் நிறுவனர் விஜயகாந்தின் மனைவியும், அக்கட்சியின் பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த், கட்சியின் புதிய பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார்.

இதையும் படிங்க: விஜயகாந்த் மறைவுக்கு பிரதமர் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.