ETV Bharat / state

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் கொள்கை விளக்க குறிப்பு - முழு விவரம்! - TN Assembly

வரவு செலவு திட்டம் 2023 - 2024ஆம் நிதி ஆண்டில் 9699.10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் கொள்கை விளக்க குறிப்பு - முழு விவரம்!

author img

By

Published : Apr 12, 2023, 6:19 PM IST

சென்னை: இன்று நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவையில், வரவு செலவு திட்டம் 2023 - 2024ஆம் நிதி ஆண்டில் 9699.10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக,

  • நிர்வாகத்தை திறம்பட செயல்படுத்த ஏதுவாக, மாநிலம் 38 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மாவட்டமும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் இயங்கி வருகிறது.
  • ஒவ்வொரு மாவட்டமும் நிர்வாக நலனுக்காகவும், சிறப்பாக செயல்படும் நோக்குடனும் சார் ஆட்சியர், வருவாய் கோட்ட அலுவலர் தலைமையில் 94 வருவாய் கோட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
  • நிர்வாக நலனை கருத்தில் கொண்டு, தற்போது 314 வட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. தற்போது மாநிலத்தில் மொத்தம் ஆயிரத்து 195 குறுவட்டங்கள் உள்ளன.
  • தமிழ்நாட்டில் மொத்தம் 16 ஆயிரத்து 743 கிராமங்களில், கிராம நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.
  • 2023 - 2024ஆம் ஆண்டுக்கு அனைத்து ஓய்வூதியத் திட்டங்களுக்கும் 5337.18 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • விடுதலை போராட்ட வீரர் ஓய்வூதியத் திட்டங்களுக்காக 2023 - 2024ஆம் நிதியாண்டிற்கு 16.48 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 31-3-2023 முடிய, இதுவரை 34 லட்சத்து 15 ஆயிரத்து 774 பயனாளிகளுக்கு 2440.02 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
  • 2022 - 2023ஆம் ஆண்டு தமிழ்நாடு பேரிடர் மீட்பு படைக்கு வாகனங்கள் கொள்முதல் செய்ய 2.31 கோடி ரூபாய் மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டு, வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை பணியாளர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிப்பதற்காக 15.21 கோடி ரூபாய் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டு, உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதோடு, பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது.
  • திருவாரூர், மயிலாடுதுறை, அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் எதிர்பாராத கனமழை காரணமாக 93 லட்சத்து 87 ஆயிரத்து 373 ஹெக்டேர் பரப்பில் வேளாண் பயிர்கள் சேதம் அடைந்தன. பாதிப்பிற்குள்ளான ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 907 விவசாயிகளுக்கு 112.72 கோடி ரூபாய் நிவாரணம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ள தணிப்பு நடவடிக்கைகளுக்கு 373.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • தேசிய பேரிடர் தனிப்பு நிதியிலிருந்து பெருநகர சென்னை மாநகராட்சியில் நகர்புற வெள்ள அபாய குறைப்பு பெறுவதற்கு 304.51 கோடி ரூபாய்க்கான முன்மொழிவுகள் உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஆஹா! விளையாட்டு துறைக்கு இவ்வளவு அறிவிப்புகளா! உதயநிதி கூறியது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.