ETV Bharat / state

17 மாவட்டங்களில் கனமழை; மீனவர்களுக்கு வார்னிங் - வானிலை ஆய்வு மையம்! - Tamil Nadu rain

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தின் 17 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை வானிலை ஆய்வு மையம்
author img

By

Published : Nov 10, 2022, 4:31 PM IST

சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்ற நிலையில் தமிழகம், புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் அடுத்து 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இன்று முதல் 14 ஆம் தேதி வரை மிதமானது முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும், புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடல், குமரிக் கடல், லட்சத்தீவு, மாலத்தீவு, மற்றும் ஆந்திர கடலோர எல்லைப் பகுதிகளில் மணி 50 கிலோ மீட்டர் தூரம் வரை சூறைக் காற்று வீசக் கூடும் என்பதால் கடலோடும் மீனவர்கள் வரும் 14ஆம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.

இதையும் படிங்க : தேர்ந்தெடுக்கப்பட்ட அக்கவுண்ட்களுக்கு ”ப்ளூ டிக்” சேவை நிறுத்தம்! டிவிட்டர் அதிரடி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.