தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன்(22) தனது நண்பர் பிரேம் குமாருடன் (22) கடந்த மாதம் 30 ஆம் தேதி சென்னை வந்தார். அப்போது அவர்கள் இருவரும் இரவு அரும்பாக்கத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கினர்.
மறுநாள் காலை கண்ணன் எழுந்து பார்த்தபோது அறையில் வைத்திருந்த அவரது லேப்டாப், செல்போன், ஏடிஎம், ரூ.5,370 பணம் ஆகியவை காணாமல் போயிருந்தன.
அதேபோல் அவரது நண்பர் பிரேம் குமாரும், அறையில் இல்லாததால் கண்ணனுக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து கண்ணன் அரும்பாக்கம் காவல் நிலையத்தில் நண்பர் பிரேம் குமார் மீது புகார் அளித்தார்.
அப்புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், பொருள்கள் திருடிச் சென்ற பிரேம் குமாரைத் தேடி வருகின்றனர்.