ETV Bharat / state

வெள்ளி,சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபட அனுமதி - பொருட்காட்சிகள் நடத்த அனுமதி

http://10.10.50.85//tamil-nadu/02-October-2021/768-512-12925811-thumbnail-3x2-staali_0210newsroom_1633177706_940.jpg

author img

By

Published : Oct 14, 2021, 3:45 PM IST

Updated : Oct 14, 2021, 5:26 PM IST

15:43 October 14

வெள்ளி,சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபட அனுமதி

அனைத்து வழிபாட்டுத்தலங்களிலும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபட தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

அதேபோல், ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைகளுக்குச் செல்ல பொதுமக்களுக்கு தமிழ்நாடு அரசு அனுமதியளித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'பண்டிகை காலங்களில் பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்காக கடைகளுக்குச் செல்வதைக் கருத்தில்கொண்டு,  இன்று முதல் ஏற்கெனவே, செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து வகைக்கடைகள், உணவகங்கள் மற்றும் அடுமனைகள்  இரவு 11 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது. 

அதேபோன்று அனைத்து வகை தனிப்பயிற்சி நிலையங்கள் எனப்படும் டியூசன் மற்றும் அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் ஆகியவையும் இன்று முதல் அனுமதிக்கப்படுகிறது. 

மேலும் பின்வரும் செயல்பாடுகளுக்கு 1-11-2021 முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

  • மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படும் மாதாந்திர மக்கள் தொடர்பு முகாம்கள் நடத்தலாம்.
  • தனியார் நிறுவனங்கள் நடத்தும் பொருட்காட்சிகள் உரிய கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்படலாம்.
  • மழலையர் விளையாட்டுப்பள்ளிகள், நர்சரி பள்ளிகள், அங்கன்வாடி பள்ளிகள் முழுமையாகச் செயல்படலாம். காப்பாளர், சமையலர் உட்பட அனைத்துப் பணியாளர்களும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.
  • திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் 100 பேர் வரை பங்குபெற அனுமதி
  • இறப்பு போன்ற நிகழ்வுகளுக்கு 50 நபர்கள் வரை அனுமதி' எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஆயுத பூஜை: 2 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்குப் பயணம்

Last Updated : Oct 14, 2021, 5:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.