ETV Bharat / state

கரோனா: முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச உதவி எண்கள் அறிவிப்பு! - தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை

சென்னை: கரோனா குறித்து தெரிந்துகொள்ளும் வகையில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் இல்லா உதவி எண்களை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

phone
phone
author img

By

Published : Apr 4, 2020, 5:36 PM IST

தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா வைரஸ் தாக்குதலைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. இச்சூழ்நிலையில், முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர்களின் தேவைகளை உடனுக்குடன் அறிந்துகொண்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கும் வகையில் கட்டணம் இல்லா உதவி எண்கள் அறிவிக்கப்பட்டு கடந்த 27ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

எனவே, முதியவர்களும் மாற்றுத்திறனாளிகளும் 18004-250111 என்ற எண்ணை தங்கள் தேவைகளுக்காகத் தொடர்பு கொள்ளலாம். கேட்கும் மற்றும் பேசும் திறனற்றவர்களுக்கு காணொலி மூலம் சைகை மொழியில் (Sign language) தங்களது தேவைகளைத் தெரிவிக்க 97007- 99993 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த இரண்டு எண்களும் 24 மணி நேரமும் செயல்படும்.

கரோனா நோய்த்தொற்று குறித்த ஆலோசனைகளை முதியவர்களுக்கு அளிக்கும் வகையில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை ஆலோசனை மையம் செயல்படும். இந்த ஆலோசனை மையத்தைத் தொடர்புகொள்ள 044-2859080, 044-28599188 ஆகிய இரண்டு எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: உணவின்றி வாடும் கடற்கரையோரப் பறவைக் கூட்டம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.