சென்னை: 2022-23ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 19) தாக்கல் செய்தார். அப்போது, "விவசாயிகளுக்கு விலையில்லா தென்னங்கன்றுகள் வழங்கப்படவுள்ளது.
- 3204 கிராம பஞ்சாயத்துகளில் 300 கோடி ரூபாய் மாநில அரசின் நிதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும்.
- உழவர்களை கைப்பிடித்து வளர்ச்சிக்கு அழைத்துச்செல்ல ஊரகவளர்ச்சி துறையுடன் இணைந்து வேளாண்துறை பாடுபடும்.
- 150 வேளாண் தொகுப்புகளை 7அயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கிட 5 கோடி ரூபாய் ஒன்றிய அரசு - மாநில அரசின் நிதியில் செயல்படுத்தப்படும்.
- நெல் ஜெயராமன் மரபுசார் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம் மூலம் 20 ஆயிரம் விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் ரகங்கள் வழங்கப்படும்.
- விவசாயிகளுக்கு விலையில்லா தென்னங்கன்றுகள் வழங்க 300 கோடி ரூபாய் ஒதுக்கீடும், மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்திற்கு ₹71 கோடி நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.
- இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க 400 கோடி ரூபாய் ஒதுக்கீடு 30 ஆயிரம் மெட்ரிக் டன் அளவில் நெல் பயிர் வகைகள், எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் அறிவிப்பு : உடனுக்குடன் ...