ETV Bharat / state

அமைச்சர் உதயநிதி தொகுதியில் பள்ளிக்கூடம் கட்டி தருவதாக மோசடி - சுட்டிக்காட்டும் அறப்போர் இயக்கம் - பள்ளி இடிப்பு விவகாரம்

சென்னை மாநகராட்சி நடுநிலைப் பள்ளியை இடித்து, புதிதாக நடுநிலைப் பள்ளி கட்டித் தருவதாகக் கூறி, தற்பொழுது கல்யாண மண்டபம் கட்டப்போவதை எதிர்த்து அறப்போர் இயக்கம் முதலமைச்சருக்கு புகார் அனுப்பியுள்ளது.

Fraud of building a school in Minister Udayanidhi Constituency says arappor iyakkam

author img

By

Published : May 11, 2023, 5:58 PM IST

சென்னை: சென்னை மாநகராட்சி வார்டு 114 பங்காரு தெருவில், சேப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி நடுநிலைப்பள்ளியை இடித்து, புதிதாக நடுநிலைப்பள்ளி கட்டித் தருவதாகக் கூறி, தற்பொழுது கல்யாண மண்டபம் கட்டப்போகும் நடவடிக்கையை எதிர்த்து அறப்போர் இயக்கம் முதலமைச்சர், தலைமைச்செயலர், உள்ளாட்சித் துறை அமைச்சர் நேரு, அமைச்சர் மற்றும் சேப்பாக்கம் MLA உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டவர்களுக்குப் புகார் அனுப்பியுள்ளது.

இதுதொடர்பாக அறப்போர் இயக்கம் அனுப்பிய மனுவில், "சென்னை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வார்டு 114 பங்காரு தெருவில் பல வருடங்களாக இயங்கி வருகிறது. கிட்டத்தட்ட 115 மாணவர்கள், இந்தப் பள்ளியில் படித்து வந்தனர்.

இந்த நடுநிலைப்பள்ளியை இடித்து, புதிதாக நடுநிலைப்பள்ளி கட்டித்தருகிறோம் என்று சொல்லி மாணவர்கள் கடந்த ஆண்டு இறுதியில் ஸ்டார் தியேட்டர் அருகில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் அமர்த்தப்படுகின்றனர். பிறகு, மாநகராட்சி உருது நடுநிலைப்பள்ளிக்கு மாற்றப்படுகின்றனர். வெறும் 4 கிளாஸ் ரூமில் அனைத்துப் பள்ளி மாணவர்களும் அமர்த்தப்படுகின்றனர். இந்த மாற்றங்களினால் சிறு குழந்தைகள் பள்ளியிலிருந்து வெளியேறி, கிட்டத்தட்ட 80 பேர் தான் பள்ளியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

கடந்த ஆண்டு இறுதி டிசம்பர் 2022-ல் மாநகராட்சி மாமன்ற தீர்மான எண் 703/2022 மூலமாக 8ஆயிரம் சதுர அடி நிலத்தில் உள்ள பழைய பள்ளிக்கூடத்தை இடித்து, புதிய நடுநிலைப்பள்ளி கட்டப்போவதாகத் தெரிவித்து அதற்கான மாமன்றத் தீர்மானம் பெறப்படுகிறது.

அதன் பிறகு பழைய பள்ளிக்கூடத்தை இடித்து புதிய நடுநிலைப்பள்ளி கட்டுவதற்காக 2 கோடி அளவில் மார்ச் 2023-ல் சென்னை மாநகராட்சி டெண்டர் போடுகிறது. 2 பேர் பங்கெடுத்து அந்த டெண்டர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு மாநகராட்சி பள்ளி இடிக்கப்பட்டுவிட்டது. புதிய பள்ளிக்கூடம் கட்டப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பில் இருந்த நிலையில் அந்த இடத்தில் வார்டு 114வது கவுன்சிலர் மதன்மோகன் நடுநிலைப்பள்ளிக்கு பதிலாக, மாநகராட்சி சார்பில் கல்யாண மண்டபம் கட்டப்போகிறார் என்று தெரியவருகிறது.
ஆனால், திமுக வார்டு 114வது கவுன்சிலர் மற்றும் மாநகராட்சி மண்டலத் தலைவர் மதன்மோகன் இந்த இடத்தில் கல்யாண மண்டபம் கட்டவேண்டும் என்று மாமன்றத் தீர்மானம் கொண்டுவர மாநகராட்சிக்குக் கடிதம் அனுப்புகிறார். ஏப்ரல் 28, 2023அன்று மேயர் பிரியா தலைமையிலான மாமன்றம் மோசடியாகத் தீர்மானம் 236/2023 ஒன்றை நிறைவேற்றுகிறது.

அதில், ஏற்கெனவே இந்த இடத்தில் நடுநிலைப்பள்ளி கட்டப்போவதாக சொன்ன தீர்மானத் தகவல்களை மறைத்து, புதிய பள்ளி கட்டுவதற்காகப் போடப்பட்ட டெண்டர் விவரங்களையும் மறைத்து, மேலும் 60 மாணவர்களே இருப்பதாக பொய்யையும் சொல்லி மாமன்றம் இந்த இடத்தில் கல்யாண மண்டபம் கட்டப்போகிறோம் என்ற மோசடி தீர்மானத்தை நிறைவேற்றுகிறது.
மோசடி வேலைகளில் ஈடுபட்ட கவுன்சிலர் மதன்மோகன் மற்றும் இதற்கு துணை போன மேயர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளின் இந்த செயல்பாட்டை அறப்போர் இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. இந்தப் புகாரை ஏற்று, உடனடியாக அவர்கள் கல்யாண மண்டபம் கட்டும் தீர்மானத்தை திரும்பப் பெற்று ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட நடுநிலைப்பள்ளி கட்டும் தீர்மானம் மற்றும் டெண்டர் வேலைகளைத் தொடர வேண்டும். மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மாணவி நந்தினிக்கு இல்லம்தேடி சென்று கவிஞர் வைரமுத்து தங்கப்பேனா பரிசு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.