ETV Bharat / state

வாகனத்திற்கு அபராதம்: காரணத்தைக் கேட்டா நீங்களே சிரிப்பீங்க..! - ஹெல்மெட்

சென்னை: நான்கு சக்கர சொகுசு வாகன உரிமையாளருக்கு ஹெல்மெட் அணியவில்லை என அபராதம் விதிக்கப்பட்டுள்ள விநோத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

four wheeler car
author img

By

Published : Sep 1, 2019, 11:19 PM IST

சென்னை கொட்டிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பரணீஸ்வரன். உயர்நீதிமன்ற வழக்கறிஞரான இவர், தனது மனைவி நந்தினி பெயரில் கார் ஒன்றை சில ஆண்டுகளுக்கு முன் வாங்கியுள்ளார். இந்நிலையில், ஆகஸ்ட் 25ஆம் தேதி நந்தினியின் அலைபேசிக்கு சென்னை போக்குவரத்துக் காவல்துறையிலிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில், 25ஆம் தேதி மதியம் 1.15 மணிக்கு அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனை அருகேயுள்ள சாலையில் ஹெல்மட் அணியாமல் சென்றதற்காக 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த நந்தினி, தனது வாகன எண், முகவரி எல்லாம் சரியாக இருப்பதைக் கண்டு குழப்பம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து நந்தினி இது தொடர்பாக தனது கணவர் பரணீஸ்வரனிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவர், அலைபேசியில் வந்த இணைய அபராத ரசீதை பார்த்தபோது, அதில் இருசக்கர வாகனத்தின் பின் இருக்கையில் ஹெல்மெட் அணியாமல் சென்றதாகக் கூறி 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், வாகன பதிவு எண் தங்களுடைய நான்கு சக்கர வாகனத்தினுடையது என்பதை பார்த்த அவர், இணையம் மூலமாக போக்குவரத்து காவல்துறைக்கு புகார் அளிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால், சரியான பதில் கிடைக்காததைத் தொடர்ந்து பரணீஸ்வரன் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இதுகுறித்து வழக்கறிஞர் டென்னி கூறுகையில், "போக்குவரத்து விதி மீறல்கள் கேமராக்கள் மூலமாக கண்காணிப்பட்டு வருவதால், இந்த அபராதம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் அல்லது புகைப்படங்கள் அபராதச் சீட்டில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், புகைப்படமோ குற்றச் சம்பவம் தொடர்பான காட்சிகளோ? அதில் இணைக்கப்படவில்லை. இணைய வழியாக அபராதச் சீட்டு அனுப்பும்போது வட்டார போக்குவரத்து அலுவலகம் வாயிலாகவே பதிவு எண்ணுக்குரிய முகவரி பெறப்படும் என்றும், அப்போது அது என்ன மாதிரியான வாகனம் என்பது குறித்த தகவலும் கிடைத்துவிடும்" என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசுகையில், "போக்குவரத்து காவல்துறையால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஏஎன்பிஆர் கேமராக்கள் தானாகவே வாகன எண்ணைத் தெளிவாக பதிவு செய்யும் தனித்துவம் கொண்டது. ஆனால், அவ்வகை கேமராக்கள் அண்ணாநகர் மற்றும் முட்டுக்காடு உள்ளிட்ட பகுதிகளில் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளன. இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படும் இடத்தில் அவ்வகை கேமராக்கள் பொருத்தப்படவில்லை. இதனை தெரிவித்தபோது இந்தத் தவறு எப்படி நடந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு சக்கர வாகனத்திற்கு அபராதம்:
நான்கு சக்கர வாகனத்திற்கு அபராதம்

மேலும், தேசிய தகவல் மையமான நேஷனல் இன்ஃபர்மேட்டிக் சென்டரில் இருந்து அனுப்பப்படும் இணைய அபராத சீட்டுகளில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே விவரம் இருப்பது இவ்விரு மொழிகளும் அறியாத பாமர மக்களுக்கு தங்கள் மீது என்ன குற்றம் சுமத்தப்பட்டுள்ளது என்கிற விவரம் தெரியாமலேயே நடவடிக்கைகளுக்கு பயந்து அபராதம் செலுத்தும் நிலையை உருவாக்கும் என்பதே கசப்பான உண்மை"என்றும் அவர் கூறினார்.

Intro:Body:*கார் உரிமையாளருக்கு ஹெல்மட் அணியாமல் சென்றதாக்கூறி அபராத நோட்டீஸ்*

4 சக்கர சொகுசு வாகன உரிமையாளருக்கு ஹெல்மெட் அணியவில்லை என அபராதம் விதிக்கப்பட்டுள்ள வினோத சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது.

சென்னை கொட்டிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பரணீஸ்வரன். உயர்நீதிமன்ற வழக்கறிஞரான இவர் தனது மனைவி நந்தினி பெயரில் சொகுசு கார் ஒன்றை சில ஆண்டுகளுக்கு முன் வாங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த 25 ஆம் தேதி நந்தினியின் அலைபேசிக்கு சென்னை போக்குவரத்து காவல்துறையில் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் 25 ஆம் தேதி மதியம் 1.15 மணிக்கு அரசு ராஜீவகாந்தி மருத்துவமனை அருகே உள்ள சாலையில் ஹெல்மட் அணியாமல் சென்றதாக்கூறி 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைகண்டு அதிர்ச்சியடைந்த நந்தினிக்கு, வாகன எண், முகவரி எல்லாம் சரியாக இருப்பதைக் கண்டு குழப்பமும் ஏற்பட்டுள்ளது.

(பேட்டி - நந்தினி - கார் உரிமையாளர்)

இதனைத் தொடர்ந்து நந்தினி இது தொடர்பாக இது தொடர்பாக தனது கணவர் பரணீஸ்வரனிடம் தெரிவித்துள்ளார். அவர் அலைபேசியில் வந்த இணைய அபராத ரசீதை பார்த்தபோது அதில் இருசக்கர வாகனத்தின் பின் இருக்கையில் ஹெல்மெட் அணியாமல் சென்றதாகக் கூறி 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் வாகன பதிவு எண் தங்களுடைய 4 சக்கர வாகனத்தினுடையது என்பதை பார்த்த அவர், இணையம் மூலமாக போக்குவரத்து காவல்துறைக்கு புகார் அளிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் சரியான பதில் கிடைக்காததைத் தொடர்ந்து பரணீஸ்வரன் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார் அளித்தார்.

(பேட்டி - பரணீஸ்வரன் - நந்தினியின் கணவர்)

போக்குவரத்து விதி மீறல்கள் கேமராக்கள் மூலமாக கண்காணிப்பட்டு வருவதால் இந்த அபராதம் தொடர்பான சி.சி.டி.வி. காட்சிகள் அல்லது புகைப்படங்கள் அபராத சீட்டில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் புகைப்படமோ குற்ற சம்பவம் தொடர்பான காட்சிகளோ அதில் இணைக்கப்படவில்லை என்று கூறும் வழக்கறிஞர் டென்னி, இணைய வழியாக அபராத சீட்டு அனுப்பும்போது வட்டார போக்குவரத்து அலுவலகம் வாயிலாகவே பதிவு எண்ணுக்குரிய முகவரி பெறப்படும் என்றும், அப்போது அது என்ன மாதிரியான வாகனம் என்று தகவல் கிடைத்துவிடும் என்றும் கூறுகிறார்.

(பேட்டி - டென்னி - வழக்கறிஞர்)

போக்குவரத்து காவல்துறையால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ANPR கேமராக்கள் தானாகவே வாகன எண்ணை தெளிவாக பதிவு செய்யும் தனித்துவம் கொண்டது. ஆனால் அவ்வகை கேமராக்கள் அண்ணாநகர் மற்றும் முட்டுக்காடு உள்ளிட்ட பகுதிகளில் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளது. சம்பவம் நடந்ததாக கூறப்படும் இடத்தில் அவ்வகை கேமராக்கள் பொருத்தப்படவில்லை. அப்படி இருக்க இந்த தவறு எப்படி நடந்தது என விசாரணை நடந்து வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேசிய தகவல் மையமான நேஷனல் இன்பர்மேட்டிக் சென்டரில் இருந்து அனுப்பப்படும் இணைய அபராத சீட்டுகளில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் மட்டுமே விவரம் இருப்பது இவ்விரு மொழிகளும் அறியாத பாமர மக்களுக்கு தங்கள் மீது என்ன குற்றம் சுமத்தப்பட்டுள்ளது என்கிற விவரம் தெரியாமலேயே நடவடிக்கைகளுக்கு பயந்து அபராதம் செலுத்தும் நிலையை உருவாக்கும் என்பதே கசப்பான உண்மை.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.