துபாயிலிருந்து நேற்று (அக்.21) அதிகாலை ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் மீட்பு விமானம் சென்னை சா்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறையினர் சோதனையிட்டனார்.
அப்போது ராமநாதபுரத்தைச் சேர்ந்த சிராஜிதீன் ஜாபர்(27), அனிஷ் ரஹ்மான்(24), சதகதுல்லா(24),சாஹுபர் அலி(39) ஆகிய நான்கு பயணிகள் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து நான்கு பேரையும் தனி அறைகளுக்கு அழைத்துச் சென்று சோதணையிட்டனர். சோதனையில் நான்கு பேரும் 17 தங்க பசை உருளைகளை உடலுக்குள்ளும், உள்ளாடைகளுக்கும் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
பின்னர், அவர்களிடமிருந்து 44.5 லட்சம் மதிப்புடைய 864 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.மேலும் நான்கு பேரையும் கைது செய்து சுங்கத்துறை அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.