சென்னை பழைய வண்ணாரப்பேட்டை போஜராஜன் நகரில் வசித்து வருபவர் மணிகண்டன். இவர், அப்பகுதியிலுள்ள அந்தோணி என்பவரிடம் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த கார்த்திக், ஹரிபாபு, குள்ள கார்த்திக், குமுதா ஆகியோர் மணிகண்டனை தடுத்து அனுப்பி வைத்துள்ளனர்.
இதனால், மணிகண்டன், அவரது உறவினரான பிரபல கஞ்சா வியாபாரி கஜா என்னும் கஜலட்சுமி, மூர்த்தி, சரித்திர பதிவேடு குற்றவாளியான பூபாலன் ஆகியோர் கத்தி, உருட்டுக் கட்டைகளைக் கொண்டு தகராறை தடுத்த நபர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதையடுத்து, அவர்களை மீட்ட அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், விசாரணை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து, இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களை வண்ணாரப்பேட்டை காவல் ஆய்வாளர் ப்ரான்வின் டேனி தலைமையிலான தனிப்படையினர் கைது செய்தனர். மேலும், அவர்கள் நான்கு பேர் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய புழல் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: டாஸ்மாக்கில் தகராறு செய்து ஊர்க்காவல் படையைச் சேர்ந்தவரின் மண்டையை உடைத்த நபர்கள் கைது