சென்னை: வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான 4% இடஒதுக்கீட்டை உறுதி செய்ய 9 பேர் கொண்ட குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அந்த அரசாணையில், 'அரசுப் பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், வேலைவாய்ப்பு வழங்குவதை உறுதி செய்திடும் வகையில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதில் மாற்றுத்திறனாளிகள் துறை செயலாளர் தலைவராகவும், தொழிலாளர் நலத்துறை, மனிதவள மேலாண்மைத்துறைச் செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்களாகவும் மாற்றுத்திறனாளிகள் செயல்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் 9 பேர் கொண்ட குழு மாற்றுத்திறனாளிகளுக்கான 4% இடஒதுக்கீட்டை உறுதி செய்ய தகுந்த நடவடிக்கை எடுக்கும்' இவ்வாறு அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திரை பிரபலங்கள் முன்னிலையில் விக்னேஷ் சிவனை கரம் பிடித்தார் நயன்தாரா!