சென்னை: இந்தியாவின் சிறந்த வேளாண் விஞ்ஞானியும், பசுமை புரட்சியின் தந்தை என அழைக்கபடும் எம்.எஸ்.சுவாமிநாதன், சென்னையில் அவரது மகள்களுடன் வசித்து வந்த நிலையில், வயது மூப்பு காரணமாக இன்று (செப்.28) காலை காலமானார். தேனாம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் எம்.எஸ்.சுவாமிநாதன் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் தனது X வலைத்தள பக்கத்திலும், அறிக்கை மூலமாகவும் தனது இரங்கலை தெரிவித்திருந்தார். மேலும், எதிர்கட்சித் எடப்பாடி பழனிசாமி, வி.கே.சசிகலா மற்றும் என பலரும் தங்களது இரங்கலை தெரிவித்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து பல அரசியல் தலைவர்கள் எம்.எஸ்.சுவாமிநாதன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், நாட்டின் முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, இன்று மாலை எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பேசும்போது, "எம்.எஸ்.சுவாமிநாதனின் மறைவு எனக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது. நான் அவரை மிகவும் ரசித்துள்ளேன். விவசாயமே என்று அவர் வாழ்ந்துள்ளார். இந்திய நாட்டிற்கு அவர் மகன்போல் இருந்தார். மேலும், இந்தியாவில், வேளாண்மையில் அவர் எண்ணில் அடங்காத புரட்சிகளை கொண்டு வந்துள்ளார்.
நான் விவாசய குடும்பத்தைச் சார்ந்தவன்தான். எப்பொழுதும் அவரை வழிகாட்டியாக கொண்டு நான் வாழ்ந்துள்ளேன். நான் அவரைப் பற்றி தொடர்ந்து பேசுவேன். மேலும், வேளாண்மை சார்ந்து அவரின் ஆலோசனையை, நாடாளுமன்றத்திலும் ஏற்றுக் கொள்ளப்படும். நான் அவரின் மறைவுக்கு அவர்களின் குடும்பதிற்கு என் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர் ஒரு அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்ந்து மறைந்துள்ளார். விவசாயத்தின் தந்தையாக இருந்துள்ளார். மேலும், இந்திய நாட்டின் விவசாயம் குறித்து, எம்.எஸ்.சுவாமிநாதன் கமிஷன் பல அறிவுரைகளை வழங்கி உள்ளது. அவர் மறைந்தது நாட்டிற்கு பெரிய இழப்பு ஆகும்" என்று தெரிவித்தார்.