ETV Bharat / state

முன்னாள் மத்திய இணை அமைச்சர் எழில்மலை உயிரிழப்பு - சென்னை மாவட்டச் செய்திகள்

சென்னை: முன்னாள் மத்திய இணை அமைச்சர் தலித் எழில்மலை இன்று அதிகாலை மாரடைப்பால் உயிரிழந்தார்.

ezhilmalai
ezhilmalai
author img

By

Published : May 6, 2020, 1:19 PM IST

கடந்த சில நாள்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த முன்னாள் மத்திய அமைச்சர் எழில்மலை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 74 வயதான இவர் இன்று அதிகாலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு முனிரத்தினம் என்கிற மனைவியும் மூன்று மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். அவரது உடல் சொந்த ஊரான இரும்பேடு கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, இறுதிச்சடங்கு செய்யப்படுகிறது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகேயுள்ள இரும்பேடு கிராமத்தில் 1945ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதி பிறந்தவர் எழில்மலை. 1970ஆம் ஆண்டு முதல் ராணுவத்தில் சேர்ந்து பணிபுரிந்த எழில்மலை, 1971ஆம் ஆண்டு இந்தியா- பாகிஸ்தான் போரில் ராணுவ அலுவலராக சிறப்பாக பணியாற்றியுள்ளார். ராணுவத்தில் சிறப்பாக பணியாற்றியமைக்காக இவருக்கு கே. சைனிக் சேவா பதக்கம் வழங்கப்பட்டது.

ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற தலித் எழில்மலை, பாமகவில் இணைந்து அக்கட்சியின் பொதுச்செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். இந்நிலையில், 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாமக சார்பில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர், வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசில் (தனிப்பொறுப்பு) சுகாதாரத்துறை இணை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

இரும்பேடு கிராமத்தில் இருக்கும் எழில்மலை உடல்

2001ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் திருச்சி பொது தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தலித் எழில்மலை சாதி ஒழிப்பு அரசியலில் மிகத் தீவிரமாக செயல்பட்டுள்ளார். இவரது இறப்பிற்கு பலரும் இறங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், இவரது உடல் இன்று மாலை 4 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: கோவிட்-19: மோடிக்கு மக்கள் ஆதரவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.