ETV Bharat / state

ஸ்டாலினுடன் ரகுராம் ராஜன் சந்திப்பு - tamil nadu economic development

தலைமைச் செயலகத்தில் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரும், முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் உறுப்பினருமான பேராசிரியர் ரகுராம் ராஜன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினார்.

முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து ரகுராம் ராஜன் ஆலோசனை

author img

By

Published : Dec 13, 2021, 6:16 PM IST

சென்னை: கரோனா தொற்றால் தனிநபர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதைப் போல மாநிலத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் சரிவு கண்டுள்ளது. மாநிலத்தின் வரி வருவாய் குறைந்துள்ளது.

இதனைச் சீராக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் மாநிலத்தின் பொருளாதாரம் குறித்து மு.க. ஸ்டாலினுக்கு ஆலோசனை வழங்க ஐந்து பேர் அடங்கிய குழு ஜூன் 21ஆம் தேதி அமைக்கப்பட்டது.

இந்தக் குழுவில், பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற ஆய்வாளர் எஸ்தர் டஃப்லோ, முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன், மத்திய அரசின் தலைமை பொருளாதார முன்னாள் ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியம், மத்திய அரசின் நிதித் துறை முன்னாள் செயலர் டாக்டர் எஸ். நாராயணன், டெல்லி ஸ்கூல் ஆஃப் எக்னாமிக், ராஞ்சி பல்கலைக்கழக பேராசிரியர் ஜீன் ட்ரெஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

  • இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரும், முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் உறுப்பினருமான பேராசிரியர் ரகுராம் ராஜன் அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களை சந்தித்துப் பேசினார். pic.twitter.com/7MDtt0shyq

    — CMOTamilNadu (@CMOTamilnadu) December 13, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

பொருளாதாரம் மீண்டும் எழுச்சி பெற

தமிழ்நாடு பொருளாதாரம் மீண்டும் எழுச்சி பெற நடவடிக்கை எடுக்கும் வகையில் ஸ்டாலின் இந்த நடவடிக்கையை மேற்கொண்டார். மேலும், கரோனா பாதிப்பால் தமிழ்நாடு பொருளாதார வீழ்ச்சி உள்ளிட்டவை குறித்து இதுவரை இருமுறை இந்தக் குழுவுடன் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டிருந்தார்.

இந்த நிலையில், தலைமைச் செயலகத்தில் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரும், பொருளாதார ஆலோசனைக்குழுவில் ஒருவருமான ரகுராம் ராஜன் ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழ்நாட்டின் பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து ரகுராம் ராஜன்
ஸ்டாலினைச் சந்தித்து ரகுராம் ராஜன்

இச்சந்திப்பின்போது, அவருடன் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமை செயலர் இறையன்பு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தமிழ்நாட்டின் பொருளாதார வல்லுநர் குழு உணர்த்தும் செய்தி என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.