ETV Bharat / state

தேசிய பங்குச் சந்தை முறைகேடு - முன்னாள் தேசிய பங்குச்சந்தை நிர்வாக இயக்குநர் கைது

தேசிய பங்குச் சந்தை முறைகேடுகள் தொடர்பாக முன்னாள் தேசிய பங்குச்சந்தை நிர்வாக இயக்குநர் சித்ரா ராமகிருஷ்ணன் டெல்லியில் கைது செய்யப்பட்டார்.

தேசிய பங்குச் சந்தை முறைகேடு
தேசிய பங்குச் சந்தை முறைகேடு
author img

By

Published : Mar 7, 2022, 9:37 AM IST

சென்னை: தேசிய பங்குச் சந்தை நிர்வாக இயக்குநராக 2013 முதல் 2016 ஆண்டு வரை சித்ரா ராமகிருஷ்ண பணிபுரிந்து வந்தார். அவர் பணிபுரிந்த காலகட்டத்தில் தேசிய பங்குச் சந்தை நிர்வாக செயலாக்க அதிகாரியாக ஆ்னந்த் சுப்பிரமணியன் நியமித்ததில் முறைகேடு உள்ளிட்ட புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் மும்பையில் உள்ள சித்ரா ராமகிருஷ்ணன் வீடு உள்பட அவர் தொடர்புடைய அலுவலகங்களில் மும்பை வருமான வரி புலனாய்வு அதிகாரிகள் கடந்த மாதம் 17ஆம் தேதி சோதனை மேற்கொண்டனர். இதேபோல ஆனந்த் சுப்பிரமணியத்திற்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடந்தன.

மேலும் தேசிய பங்குச் சந்தையின் ரகசிய தகவல்களை இமயமலையில் உள்ள சாமியாரிடம் கூறியதாக புகார் எழுந்த நிலையில், தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் கடந்த 24ஆம் தேதி நள்ளிரவு சென்னையில் ஆனந்த் சுப்ரமணித்தை சிபிஐ அலுவலர்களால் கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் முன் ஜாமின் வழங்கக் கோரி சித்ரா ராமகிருஷ்ணன் தொடர்ந்த மனுவை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனைத் தொடர்ந்து நேற்று நள்ளிரவு (மார்ச் 07) டெல்லியில் வைத்து சித்ரா ராமகிருஷ்ணனை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். இது தொடர்பாக அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: NSE சித்ரா ராமகிருஷ்ணனின் கூட்டாளி ஆனந்த் சுப்ரமணியம் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.