ETV Bharat / state

முன்னாள் எம்.பி. அன்பரசு மரணத்தில் மர்மம் - கதறும் மூத்த மகள்! - முன்னாள் எம்.பி அன்பரசு

சென்னை: காங்கிரஸ் முன்னாள் எம்.பி அன்பரசு மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது மூத்த மகள் சுமதி பூவிருந்தவல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

anabasaru
author img

By

Published : Aug 9, 2019, 4:53 PM IST

சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் காங்கிரஸ் எம்.பி அன்பரசு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். ஆனால் சொத்துக்காக அவரது மகனே கொலை செய்துவிட்டதாக கூறி அவரது மூத்த மகள் சுமதி குற்றம்சாட்டியுள்ளார். மேலும் தனது தந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும்,அவரது உடலை உடற்கூறாய்வு செய்யவேண்டும் எனவும் பூவிருந்தவல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

முன்னாள் எம்.பி. அன்பரசுவின் மகள் சுமதி

இந்நிலையில், தனது அண்ணன் அருள் சொத்துக்காக தனது தந்தை அன்பரசுவை கொலை செய்ததாக சுமதி குற்றம்சாட்டியுள்ளார். மேலும் கடந்த சில நாட்களாக தனது தந்தையை, அண்ணன் அருள் தனது வீட்டில் அடைத்து வைத்து யாரையும் பார்க்கவிடாமல் கொடுமைப்படுத்தியதாகவும், அவருக்கு தவறான மாத்திரைகளை கொடுத்ததால்தான் அன்பரசு இறந்ததாகவும் கூறினார். அதுமட்டுமின்றி அருள் தன்னை கொலை செய்துவிடுவான் என்று தந்தை அன்பரசு சில நாட்களுக்கு முன்பு தன்னிடம் கூறியதாகவும் குற்றம்சாட்டினார்.இது தொடர்பாக பூவிருந்தவல்லி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

சென்னை
தனது பிள்ளைகளுடன் அன்பரசு

Intro:Body:காங்கிரஸ் முன்னாள் எம்.பி அன்பரசு மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது மகள் குற்றச்சாட்டு..

சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் முன்னாள் காங்கிரஸ் எம்.பி அன்பரசு உடல்நிலை சரியில்லாமல் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆனால் சொத்துக்காக அவரது மகனே கொலை செய்துவிட்டதாக கூறி அவரது மகள் சுமதி குற்றம்சாட்டினார். மேலும் தனது தந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும்,அவரது உடலை பிரேத பரிசோதனை செய்யவேண்டும் என பூவிருந்தவல்லி காவல் நிலையத்தில் அவரது அண்ணன் மீது புகார் அளித்தார்..

பின்னர் பேசிய சுமதி

எனது தந்தை அன்பரசு 3 முறை எம்.பியாக இருந்தவர் என்றும்,
கடந்த 2002ஆம் ஆண்டு பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ரா என்பவர் தொடர்ந்த  வழக்கில் ராஜீவ் காந்தி கல்வி அறக்கட்டளை சார்பில் அன்பரசு 35 லட்ச ரூபாய் கடன் வாங்கியதாகவும், அவர்கள் கொடுத்த காசோலை, கணக்கில் பணம் இல்லாததால் திரும்பி விட்டது, எனவே காசோலை மோசடி சட்டத்தின் கீழ் அன்பரசு மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோருக்கு சிறை தண்டனை விதிக்கவேண்டும் என கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை ஜார்ஜ் டவுன் மாஜிஸ்ட்ரேட் அன்பரசு, அவரது மனைவி கமலா மற்றும் அறக்கட்டளை நிர்வாகி மணி ஆகியோருக்கு தலா 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து கடந்த 2015ஆம் ஆண்டு உத்தரவிட்டார். 

இந்த தீர்ப்பை எதிர்த்து அன்பரசு மேல்முறையீடு செய்திருந்தார். ஆனாலும்  கீழ் நீதிமன்றம் விதித்த தண்டனையை உயர்நீதி மன்றம் உறுதி செய்துது.
இந்நிலையில் அன்பரசு உடல்நலக்குறைவு காரணமாக பூந்தமல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. 

இதனிடையே அன்பரசுவின் மகன் அருள் அன்பரசு சொத்துக்காகவும், வழக்குகாகவும் அன்பரசுவை கொலை செய்ததாக அக்கா சுமதி அன்பரசு குற்றம் சாட்டியுள்ளார். மேலும் கடந்த சில நாட்களாக அன்பரசுவை அவரது மகன் வீட்டில் அடைத்து வைத்து யாரையும் பார்க்க விடாமல் கொடுமைப்படுத்தியதாகவும் சுமதி குற்றம்சாட்டியுள்ளார்.மேலும் அவருக்கு தவறான மாத்திரைகளை கொடுத்ததால் தான் தனது தந்தை இறந்ததாகவும் கூறினார்.பின்னர் தற்போது பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது எனவும் தெரிவித்தார். இது தொடர்பாக பூந்தமல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் சில நாட்களுக்கு முன்பு என்னிடம் தனது தந்தை அருள் என்னை கொலை செய்துவிடுவேன் என்று கூறியதாகவும் குற்றம்சாட்டினார்.

சுமதி பேட்டி via app..

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.