சென்னை: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்திய போது அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ இன்பதுரை வருகை தந்தார்.
அரசியல் காழ்ப்புணர்ச்சி
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனை முழுக்க முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே நடத்தப்படுகிறது.
எந்த வித முகாந்திரமும் இல்லாமல் பழிவாங்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் திமுக அரசால் நடத்தப்படுகிறது.
ஆவணங்கள் கைப்பற்றப்படவில்லை
லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் எந்த விதமான ஆவணங்களும் கைப்பற்றவில்லை. அதற்கான சான்றிதழை லஞ்ச ஒழிப்புத்துறையினர் விஜயபாஸ்கரிடம் வழங்கி உள்ளனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறையினரே தாமாக முன்வந்து சோதனை செய்துள்ளனர்.
அதிமுக அச்சுறுத்தலுக்கு அஞ்சாது
லஞ்ச ஒழிப்புத்துறையினரால் போடப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கை சட்டப்படி எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம்.
வருமானத்திற்கு அதிகமாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் சொத்துகள் சேர்க்கவில்லை என்ற ஆதாரம் உள்ளது. அதிமுக இதே போன்று பல வழக்குகளை சந்தித்துவிட்டது. அச்சுறுத்தலுக்கு அதிமுக ஒரு போதும் அஞ்சாது" என்றார்.
இதையும் படிங்க: அமைச்சர் வீட்டில் சோதனை - ஆவணங்கள் சிக்கவில்லை என வழக்கறிஞர் தகவல்