சென்னை மதுரவாயல் அடுத்த வானகரத்தில் வில்லிவாக்கம் அதிமுக பொருளாளர் இல்ல திருமண விழாவில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பென்ஜமின் உட்பட பல அதிமுக பிரமுகர்கள் கலந்து கலந்துக்கொண்டனர்.
இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயகுமார் "ஆளுநர் ஆர்.என். ரவி விவவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதிர்ச்சியற்று செயல்படுகிறார். யாரையும் ஒருமையில் பேசுவது தமிழர் பண்பாட்டுக்கு அப்பாற்பட்ட விஷயம். முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பக்குவம் வேண்டும். டென்ஷன் பார்ட்டியா இருக்க கூடாது. கோபத்தை விடுத்து பண்போடு செயல்பட வேண்டும்.
அதேபோல பத்திரிக்கையாளர்களின் மைக்கை கண்டாலே டென்ஷன் ஆகிறார்கள். அவர்கள் யார் என்று உங்களுக்கே தெரியும். சசிகலா, தினகரன்,ஓபிஎஸ் ஒன்றுபட்டால் அவர்களுக்கு தான் வாழ்வே தவிர தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த வாழ்வும் இல்லை. பொதுக்குழுவால் நீக்கப்பட்ட சசிகலா, தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு மூடப்பட்ட அதிமுக கதவுகள் மீண்டும் திறக்காவே திறக்காது. தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சீர் கெட்டுள்ளது. திமுக கொடுத்த புகாரின் அடிப்படியிலேயே ஆளுநர் ஆர்.என். ரவி விசாரணைக்காக டெல்லி சென்றிருப்பதாக பொய்யான பிம்பத்தை திமுகவினர் ஏற்படுத்துகின்றனர் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: உலக அறிவுலகத்துக்குத் தமிழை அறிமுகம் செய்வோம் - முதலமைச்சர் ஸ்டாலின்