ETV Bharat / state

சிறையில் கொசுக்கடி: மன உளைச்சலில் மாத்திரை எடுக்க மறுத்த ஜெயக்குமார்

கள்ள ஓட்டுப் போட முயற்சி செய்ததாகக் கூறி திமுக உறுப்பினரை அரை நிர்வாணப்படுத்தி தாக்கிய வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று (பிப்ரவரி 21) கைதுசெய்யப்பட்டார். அவர் பூந்தமல்லி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், முதல் பிரிவு அறை, வீட்டிலிருந்து உணவு கொண்டுவர சிறைக் காவலர்கள் அனுமதி மறுத்துள்ளனர்.

காவல் வாகனத்தில் செல்லும் ஜெயக்குமார்
காவல் வாகனத்தில் செல்லும் ஜெயக்குமார்
author img

By

Published : Feb 22, 2022, 9:42 PM IST

சென்னை: வண்ணாரப்பேட்டை 49ஆவது வார்டில் திமுகவினர் கள்ள ஓட்டு போட முயன்றதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவினர் இணைந்து திமுக பிரமுகர் நரேஷ் என்பவரைச் சரமாரியாகத் தாக்கி அரை நிர்வாணமாக இழுத்துச் சென்றனர். இது தொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் பரவியதால் சர்ச்சையானது.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது

இதனையடுத்து திமுக பிரமுகர் நரேஷ் தண்டையார்பேட்டை காவல் துறையினரிடம் அளித்த புகாரின்பேரில் ஜெயக்குமார் உள்பட 40 பேர் மீது கொலை மிரட்டல், ஆபாசமாகப் பேசுதல் உள்பட 10 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பின்னர் நேற்றிரவு (பிப்ரவரி 21) பட்டினப்பாக்கத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இல்லத்தில் வைத்து வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சுந்தரவதனம் தலைமையிலான காவல் துறையினர் அவரைக் கைதுசெய்தனர்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது

கைதுசெய்யப்பட்ட ஜெயக்குமாரை ஜார்ஜ்டவுன் 15ஆவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முரளி கிருஷ்ணா முன்பு முன்னிறுத்தினர். வருகிற 7ஆம் தேதிவரை ஜெயக்குமாரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதன் அடிப்படையில் பூந்தமல்லி கிளைச் சிறையில் அடைத்தனர்.

ஜெயக்குமார் நீதிமன்றத்தில் ஆஜர்

இரவில் கைதுசெய்யப்பட்ட ஜெயக்குமாரை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு கொண்டுவர உள்ளதாகக் கூறப்பட்டது. அதிமுகவினர் 100-க்கும் மேற்பட்டோர் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திலும், அதைபோல ஜார்ஜ்டவுன் 15ஆவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி வீடு இருக்கும் எழும்பூர் நீதிபதிகள் குடியிருக்கும் வளாகத்திலும் கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

காவல் வாகனத்தில் செல்லும் ஜெயக்குமார்

கைதான ஜெயக்குமாரை முன்னிறுத்துவதில் சிரமம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் எழும்பூர் பெருநகர தலைமை குற்றவியல் நீதிபதி, "இவ்வளவு பேர் எதற்காக நீதிபதிகள் குடியிருப்புக்குள் நுழைந்துள்ளார்கள்?" எனக் காவல் துறையிடம் கேட்டு விசாரித்துள்ளார். மேலும் எழும்பூர் நீதிமன்றத்திற்குள் ஜெயக்குமாரை முன்னிறுத்த தலைமை பெருநகர குற்றவியல் நீதிபதி காவல் துறைக்கு உத்தரவிட்டார்.

எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணை

இதன்பிறகுதான் எழும்பூர் நீதிமன்றத்திற்குள் ஜெயக்குமாரை காவல் துறையினர் கொண்டுசென்றனர். ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்திற்குள்பட்ட வழக்கானது எழும்பூர் நீதிமன்றத்திற்குள் வைத்து விசாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நேற்றிரவு முதல் இன்று (பிப்ரவரி 22) அதிகாலை வரை எழும்பூர் நீதிமன்றம் பகுதி, பட்டினப்பாக்கம் பகுதி, நுங்கம்பாக்கம் காவல் நிலையம் ஆகிய பகுதிகள் பரபரப்பாக காணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை இருக்கக்கூடிய நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதுசெய்யப்பட்டது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. மயிலாப்பூர் துணை ஆணையர் அலுவலகத்தில் ஜெயக்குமாரை வைத்து விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

கொசுக்கடியில் அவதி

இதனைத் தொடர்ந்து பூந்தமல்லி கிளைச் சிறையில் ஜெயக்குமார் அடைக்கப்பட்டபோது, முன்னாள் அமைச்சர் என்பதைக் கருத்தில்கொண்டு முதல் பிரிவு அறையை ஒதுக்க கேட்டபோது, சிறைத் துறையினர் தர மறுத்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அறையை ஒதுக்காததால் ஜெயக்குமார் சிறையில் கொசுக்கடியில் அவதிப்படுவதாகக் கூறப்படுகிறது. மேலும் அவர் திடீரென கைதானதால் மன உளைச்சலில் இரவு நேரத்தில் மாத்திரைகளைச் சாப்பிடவில்லை. இன்று காலையில்தான் அவரது குடும்பத்தினர் மாத்திரைகளைச் சிறைக்குச் சென்று கொடுத்துள்ளனர்.

மேலும், சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயக்குமாருக்கு, வீட்டிலிருந்து உணவு கொண்டுவர சிறைக் காவலர்கள் அனுமதி வழங்கவில்லை. இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் பிணை மனு மீதான விசாரணை நாளை (பிப்ரவரி 23) ஜார்ஜ்டவுன் 15ஆவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முரளி கிருஷ்ணா முன்பு வர உள்ளது.

இதையும் படிங்க: மக்கள் பணி தொடரும் - எடப்பாடி பழனிசாமி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.