ETV Bharat / state

"ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தோல்வி அடைந்த பிறகு காங்கிரஸ் மீது திமுக பழியை போடும்" - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் - DMK

திமுகவின் அத்துமீறல்கள், அநியாயங்களை தாண்டி ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக அமோகமாக வெற்றி பெறும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Erode by election:"திமுகவின் அத்துமீறல்களை உடைத்தெறிந்து அதிமுக வெற்றி பெறும்"- மாஜி அமைச்சர் ஜெயக்குமார் உறுதி

author img

By

Published : Feb 18, 2023, 4:27 PM IST

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிந்தனை சிற்பி சிங்காரவேலனின் 164ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு கீழ் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவ படத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மலர்களை தூவி மரியாதை செலுத்தினார்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "திமுக அரசில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் தீக்குளிப்பு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. திமுக ஆட்சியில் மக்களின் கருத்து உரிமை பறிக்கப்படுகிறது. ஆட்சிக்கு வரும் முன்பு நான் முதலமைச்சரானால் தலைமை செயலகத்தில் நேரடியாக மக்கள் என்னை வந்து சந்திக்கலாம் என கூறிவிட்டு தற்போது வரையும் யாரையும் பார்க்கவிடாமல் தடுக்கின்றனர்.

திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற தவறிவிட்டது. அதிமுக இடைக்காலப் பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமியை விமர்சனம் செய்யும் கனிமொழிக்கு பழைய வரலாறு தெரியாது. பதவியை மட்டும் குறிக்கோளாக கொண்டு செயல்பட்டவர் கருணாநிதி. அதிமுக கூட்டணியில் அதிமுக ஆட்சியை கலைத்த இந்திரா காந்தியுடன் கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சி செய்தவர் கருணாநிதி.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆம்லேட், டீ போடும் திமுக அமைச்சர்கள் பாத்திரத்தை மட்டும் தான் கழுவவில்லை என்றார். அதிமுக ஆட்சிக் காலத்தில் இலங்கை அரசு பயந்து இருந்தது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு துப்பாக்கி சூடு சம்பவங்கள் சாதாரணமாக நடைபெற்று வருகிறது. ஈரோட்டில் திருமங்கலம் பார்முலாவை மிஞ்சும் அளவிற்கு திமுகவினர் செயல்பட்டு கொண்டிருக்கின்றனர்.

திமுகவிற்கு மக்களை பற்றிய கவலை சுத்தமாக இல்லை என நன்றாக தெரிகிறது. வசூல் செய்வதில் மட்டுமே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனமாக இருக்கிறார். தற்போது வரை இடைத்தேர்தலில் திமுகவினர் ரூ.40 கோடி செலவு செய்துள்ளனர். இதை அனைத்தையும் தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு எடுத்து சென்றுள்ளோம்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தோல்வி அடைந்த பிறகு காங்கிரஸ் மீது திமுக பழியை போடும். "திமுக ஈரோடு இடைத்தேர்தலில் அத்துமீறல்கள், அநியாயங்கள் பண்ணாலும் அதையும் தாண்டி அதிமுக வெற்றி பெறுவது உறுதி" என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:இபிஎஸ் பெயரில் 'கண்ணன் குலம்' சர்ச்சை கடிதம்; அதிமுக ரியாக்ஷன் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.