ETV Bharat / state

குந்தவை வழங்கிய சிலைகள் கடத்தல் - போலீசார் மெத்தனம் என பொன்.மாணிக்கவேல் புகார்

Tamilnadu Idol Smuggling Complaint: 2,500 வருடங்கள் பழமையான சமண கோவில்களில் இருந்த சிலை திருடப்பட்டு அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் இருக்கிறது அதனை மீட்க வேண்டும் என்று முன்னாள் காவல் துறை அதிகாரி பொன் மாணிக்கவேல் கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் செய்தியாளர் சந்தித்து பேட்டி

author img

By

Published : Aug 15, 2023, 6:40 AM IST

முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் செய்தியாளர் சந்தித்து பேட்டி

சென்னை: திருமலை பகுதியில் உள்ள சமண கோவில்களில் இருந்த சிலை பற்றி சென்னை மயிலாப்பூரில் நேற்று (ஆகஸ்ட் 14) செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது செய்தியாளர் சந்திப்பில் முன்னாள் காவல் துறை அதிகாரி பொன் மாணிக்கவேல் பேசுகையில், "தமிழநாட்டை சேர்ந்த சுமார் 2,500 வருடங்கள் பழமையான திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூர் அருகில் இருக்கும் வைகாவூர் திருமலை பகுதியில், உள்ள சமண கோவில்களில் இருந்த சிலை திருடப்பட்டு தற்போது அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் இருக்கிறது.

இந்த சிலை திருட்டில் தொடர்பு உடைய சுபாஷ் சந்திர கபூர் மற்றும் இந்த திருட்டில் தொடர்புடைய ஒன்பது சதவீத குற்றவாளிகள் இந்தியாவில் இருக்கிறார்கள். அவர்கள் மேல் இன்று வரை தமிழக காவல்துறையினர் மற்றும் சிலை கடத்தால் தடுப்பு பிரிவு அதிகாரிகள் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த, 1959 ஆண்டு சட்டப்படி தமிழக சமண மத கோயில்கள் அனைத்தும் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.

இந்த சமண கோயிலுக்கு சொந்தமான சிலையை மீட்க சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுவதால் விசாரிப்பதில் சரிவர செயல்படுவது இல்லை.

இதையும் படிங்க: சுதந்திர தினத்தன்று உண்ணாவிரதம் - தியாகியின் மனைவி அறிவிப்பு

இந்த சமண சிலை சோழர் காலத்தைச் சேர்ந்தது , அதாவது ராஜராஜ சோழன் சகோதரி குந்தவை அவர்களால் அந்த காலத்தில் மத சார்பற்ற நிலையை எடுத்துக்காட்டும் வகையில் ஜெயினமத கோயில்களுக்கு சிலைகள் வழங்கப்பட்டது உள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க சிலைகளை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த சிலை திருட்டில் ஈடுபட்டு உள்ள குற்றவாளிகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் உடணடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும்” என தெரிவித்தார். மேலும், இந்த திருட்டு சம்பவங்கள் 2003 ஆம் ஆண்டு நடைபெற்று இருக்கலாம் எனவும் காவல் துறையிலிருந்து ஓய்வு பெற்ற தனக்கு இந்த சிலை திருட்டு தொடர்பாக இவ்வளவு ஆதாரங்கள் கிடைத்துள்ளது. இந்த நிலையில் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கூடுதல் ஆதாரங்கள் கிடைத்திருக்க நிச்சயமாக வாய்ப்பு உள்ளது.

இந்த சிலையை மீட்க சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவை சேர்ந்த டிஎஸ்பி தலைமையில் விசாரணை குழு நடவடிக்கை நடத்த வேண்டும் என தெரிவித்தார். இதன் மூலம் யாரையும் குற்றம் சாட்டுவது என் நோக்கம் இல்லை எனவும் குறைபாடுகளை மட்டுமே சுட்டிக்காட்டுவதாக அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: "நீட் மசோதாவில் தாமதம் வேண்டாம்" - குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.