ETV Bharat / state

"என் வழி ஜெயலலிதா வழி" - 'பஞ்ச்' பேசிய சசிகலா - Jayalalitha Friend sasikala

'தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்கிற ஒரே எண்ணத்தில் தான் ஜெயலலிதா செயல்பட்டார்கள். அவர் வழி தான் என்னுடைய வழி, எனக்கு என்று தனி வழி கிடையாது. எப்பொழுதும் நான் மக்களுக்காக குரல் கொடுத்து வருகிறேன்' என சசிகலா தெரிவித்தார்.

சசிகலா
சசிகலா
author img

By

Published : Dec 5, 2022, 6:04 PM IST

சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் சசிகலா ஆதரவாளர்களோடு பேரணியாக சென்று மலர்த் தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "அதிமுகவின் உண்மை தொண்டர்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். கண்டிப்பாக 2024-ல் நாங்கள் மாபெரும் வெற்றி பெறுவோம். என்னைப் பொறுத்தவரை நான் தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைக்கிறேன். அந்த ஒரே எண்ணத்தில் தான் ஜெயலலிதா செயல்பட்டார்கள். அவர் வழி தான் என்னுடைய வழி. எனக்கு என்று தனி வழி கிடையாது. எப்பொழுதும் நான் மக்களுக்காக குரல் கொடுத்து வருகிறேன்.

ஆளும் கட்சியினர் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி அதை சரி செய்ய வேண்டியது முதலமைச்சருடைய கடமை. உங்களுக்கு மக்கள் தான் இந்த ஆட்சியைக் கொடுத்து இருக்கிறார்கள். அவர்களுக்கு துரோகம் இழைக்கக் கூடாது. மாமன்ற உறுப்பினர்களையும் எல்லை மீறி தவறு செய்பவர்களையும் கண்டித்து வைக்க வேண்டும். இவை அனைத்தும் எனக்காக நான் கேட்கவில்லை. தமிழ்நாடு மக்களுக்காகவே கேட்கிறேன்'' என்று சசிகலா கூறினார்.

மேலும், ''பல்வேறு இடங்களில் இருந்து வரக்கூடிய நதி நீர் விவசாயத்திற்கும் மக்களின் தாகத்தை தீர்க்கவும் எப்படி பயன்படுகிறதோ அதே போல மிக விரைவில் அனைவரும் ஒன்று சேர்வோம். மற்ற மாநில மக்களோடு ஒப்பிடுகையில் தமிழ்நாட்டு மக்கள் மிகவும் புத்திசாலிகள், அவர்களை யாரும் ஏமாற்ற முடியாது. அவர்களுக்கு தெரியும், யார் துரோகம் செய்தது என்று. நான் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. 2024-ன் வெற்றியை நோக்கி பயணிக்கிறோம்.

"என் வழி ஜெயலலிதா வழி" - வி.கே. சசிகலா பேச்சு

மேலும், ஜெயலலிதா எப்படி செயல்பட்டர்களோ அதே போல தான் நானும். தமிழ்நாடு மக்களுக்கு என்ன வேண்டுமோ அதைக் கேட்டு பெறக்கூடிய தைரியம் என்னிடம் இருக்கிறது" என்று சசிகலா தெரிவித்தார்.

இதையும் படிங்க: டிச.7ம் தேதி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.