ETV Bharat / state

வாணி ஜெயராம் வீட்டில் தடயவியல் துறை ஆய்வு!

இன்று காலை மரணமடைந்த புகழ்பெற்ற பின்னணி பாடகி வாணி ஜெயராம் வீட்டில் தடயவியல் துறை குழுவினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

வாணி ஜெயராம் வீட்டில் தடயவியல் துறையினர் ஆய்வு

author img

By

Published : Feb 4, 2023, 7:29 PM IST

சென்னை: புகழ்பெற்ற பின்னணி பாடகி வாணி ஜெயராம் (78) இன்று காலை நுங்கம்பாக்கத்தில் ஹாடோஸ் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அவரது வீட்டீல் மரணமடைந்தார். காலை வீட்டு வேலைக்கு வந்த பெண் பலமுறை காலிங் பெல் அழுத்தியும் வாணி ஜெயராம் கதவைத் திறக்காததால் சந்தேகமடைந்த அவர் வாணி ஜெயராமின் சகோதரி உமாவிற்கு தகவல் அளித்தார்.

விரைந்து வந்த உமா அவரிடம் இருந்த மற்றொரு சாவியைக் கொண்டு கதவை திறந்து பார்த்த போது வாணி ஜெயராம் கீழே விழுந்து கிடந்துள்ளார். தகவல் அறிந்து ஆயிரம் விளக்கு போலீசார் வந்து பார்த்த போது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இதனால் போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து அவரது உடலை உடற்கூராய்விற்காக ஓமந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வாணி ஜெயராமின் உடற்கூராய்வு சோதனை இன்றே முடிக்கப்படும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது. நாளை மதியம் 1 மணியளவில் பெசண்ட் நகரில் உள்ள மின்மயானத்தில் வாணி ஜெயராமின் இறுதி சடங்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாணி ஜெயராம் இறந்த செய்தி கேட்டு திரயுலக பிரபலங்கள் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன், இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் ஆகியோர் ஆகியோர் வாணி ஜெயராம் வீட்டிற்கு வருகை தந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இசையமைப்பாளர் சங்கர் கணேஷ்,” உலகத்தில் உள்ள அனைத்து வாணி ஜெயராம் ரசிகர்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். முதன் முதலாக வாணிஜெயராமை எனது காரில் ரெக்கார்டிங்கிற்காக அழைத்துச் சென்றேன். அவரது பாடல் மட்டும் அழகு அல்ல, அவரும் அழகு தான். வாணி ஜெயராம் பத்ம பூஷன் விருதை நேரில் பெறாதது மன வருத்தத்தை அளிக்கிறது” என்றார்.

ஓய்.ஜி.மகேந்திரன்,”இந்தியாவிலேயே கலைவாணி என்ற பெயர் வாணி ஜெயராமிற்கு தான் பொருந்தும். தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவர். 50 வருடமாக நாங்களும் வாணி ஜெயராம் குடும்பத்தினரும் பழக்கம். மூன்று நாட்களுக்கு முன்பு தான் பத்ம பூஷன் விருது தொடர்பாக பேசினேன். அவர் புகழையும் பணத்தையும் ஒருபோதும் தேடியதில்லை, அவருக்கு தானாக தேடி வந்தது. அவரது இழப்பு மூத்த சகோதரியை இழந்தது போல் உள்ளது. வாணி ஜெயராம் போல் சிறந்த பாடகர் கிடையாது” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: Vani Jayaram: பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் காலமானார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.