சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, சிங்கப்பூர் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் தனியார் பயணிகள் விமானம், புறப்பட தயாராகிக் கொண்டு இருந்தது. அந்த விமானத்தில் பயணிக்க வந்த பயணிகளிடம், விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்.
அப்போது சென்னையைச் சேர்ந்த 2 ஆண் பயணிகள் மீது, அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் உடைமைகளை சோதித்தனர். உடைமைகளில் எதுவும் இல்லாததை அடுத்து அவர்கள் இருவரையும் தனி அறைக்கு அழைத்து சென்று ஆடைகளை கலைந்து சோதித்தனா். அவர்கள் இருவரின் உள்ளாடைகளுக்குள் கட்டு கட்டாக 20,400 அமெரிக்க டாலர் மறைத்து வைத்து இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்து,இருவரையும் கைது செய்தனா்.
இந்நிலையில் சென்னையில் இருந்து தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக் செல்லும் ஏர் ஏசியா விமான பயணிகளையும், சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனா். அப்போது சென்னையைச் சேர்ந்த ஆண் பயணியின் உள்ளாடைகள் 15,000 சவுதி அரேபியன் ரியால் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்து, பறிமுதல் செய்து, அவரையும் கைது செய்தனர்.
சென்னை விமானநிலையத்தில் அடுத்தடுத்து இரு விமானங்களில் நடந்த சோதனைகளில் மொத்தம் ரூபாய் 20 லட்சம் மதிப்புடைய, அமெரிக்க டாலர், சவுதி அரேபியா ரியால் வெளிநாட்டு கரன்சி பறிமுதல் செய்யப்பட்டு, 3 பேரை சுங்கத்துறையினர் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: திருட்டு பைக்கை சொந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்திய தலைமைக்காவலர்