ETV Bharat / state

அரசு விடுதியில் மாணவர்களுக்கு 2வது நாளாக வாந்தி, பேதி: காரணம் என்ன?

அரசு விடுதியில் பயிலும் கல்லூரி மாணவர்களுக்கு இரண்டாவது நாளாக வாந்தி மயக்கம் ஏற்பட்டு 6 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அரசு விடுதியில் மாணவர்களுக்கு 2வது நாளாக வாந்தி, பேதி: காரணம் என்ன

author img

By

Published : Dec 1, 2022, 4:39 PM IST

சென்னை: வடபழனி திருநகரில் உள்ள ஹாஸ்டல் சாலையில் தமிழ்நாடு அரசு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாணவர் விடுதி அமைந்துள்ளது. இந்த விடுதியில் பல கல்லூரி மாணவர்கள் தங்கி படிக்கின்றனர்.

இந்த நிலையில் நேற்று இந்த விடுதியில் தங்கி வந்த நான்கு கல்லூரி மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் உடனடியாக அந்த நான்கு மாணவர்களும் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வடபழனி போலீசார் விடுதிக்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றிரவு மேலும் 6 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் அவர்கள் கே.கே நகர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்ச்சியாக மாணவர்களுக்கு வயிற்றுப்போக்கு பிரச்சனை ஏற்படுவதற்கு காரணம் குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சாப்பாடு ஒத்துக்காததால் வயிற்றுப்போக்கு வாந்தி மற்றும் மயக்கம் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.

மேலும் விடுதி சமையல்காரரான ராயப்பேட்டை சேர்ந்த கோகுல்நாத் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது மட்டுமின்றி விடுதியில் சமைக்க கூடிய பொருட்களை போலீசார் ஆய்வு செய்து சுகாதாரமற்ற பொருள் ஏதும் உள்ளதா என சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ராமன் பக்தனை ராவணனுடன் ஒப்பிடுவதா? - கார்கேவுக்கு பிரதமர் மோடி பதில்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.