கரோனா வைரஸ் (தீநுண்மி) பரவல் காரணமாக ஊரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில் தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்தத் தளர்வுகளினால் கரோனா பரவாமலிருக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றது.
அதன்படி, சென்னை மெட்ரோ ரயில் நிலை தலைமை அலுவலகத்தில் உள்ள லிஃப்டுகளை கால்களால் இயக்கும் வசதியை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
லிஃப்டுகளைக் கைகளால் இயக்கினால், ஒருவர் மூலம் மற்றொருவருக்குத் தீநுண்மி பரவ வாய்ப்புள்ளது. அதனால்தான் மெட்ரோ நிர்வாகம் கால்களால் லிஃப்டுகளை இயக்கும்படி கருவி ஒன்றை வடிவமைத்தது.
அதன் சோதனை முயற்சியை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலைய தலைமை அலுவலகத்தில் தொடங்கியுள்ளது.
அடுத்தகட்டமாக அனைத்து மெட்ரோ ரயில் நிலைய லிஃப்ட்களிலும் இதுபோன்று மாற்றியமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தயார் நிலையில் சென்னை மெட்ரோ ரயில்