ETV Bharat / state

தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே விநியோகம் - அமைச்சர் சக்கரபாணி - food minister sakkarapani

தகுதியற்ற குடும்ப அட்டைகள் கண்டறியப்பட்டு தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே விநியோகம் செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது என உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

ood-minister-sakkarapani
ood-minister-sakkarapani
author img

By

Published : Aug 25, 2021, 2:09 PM IST

சென்னை : சட்டப்பேரவையில் இன்று கூட்டுறவுத் துறை, உணவு நுகர்வோர் பாதுகாப்புத் துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது. இதில் உணவுத்துறை மானிய கோரிக்கை கொள்கை விளக்க குறிப்பை அமைச்சர் சக்கரபாணி பேரவையில் இன்று(ஆக.25) தாக்கல் செய்தார்.

அப்போது பேசிய அவர், ”முழுக்கணினி மயமாக்கல் திட்டத்தின் கீழ் மாநில பொது விநியோகத்திட்டம் முழுவதும் கணினிமயமக்கப்பட்டு நியாயவிலை கடைகளின் அனைத்து பரிவர்த்தனைகளும் தானியங்கி முறையில் செயல்படுத்தப்படுகிறது.

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அன்னபூர்ணா திட்டத்தில் தமிழ்நாட்டில் வசிக்கும் 8 ஆயிரத்து 491 பயனாளிகள், 4 லட்சத்து ஆயிரத்து 445 முதியோர் உதவி தொகை பெறுவோருக்கு அரசினால் பொது விநியோக திட்டத்தின் கீழ் மாதம் ஒன்றுக்கு முறையே 10 கிலோ, ஐந்து கிலோ விலையில்லா அரிசி வழங்கப்படுகிறது.

மேற்படி பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகள் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முழு கணினிமயமாக்கல் திட்டத்தின் கீழ் ஆதார் எண் பதியப்பட்ட தரவு தொகுப்பு வாயிலாக தகுதியற்ற குடும்ப அட்டைகள் கண்டறியப்பட்டதுடன், தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே விநியோகம் செய்யப்படுவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : 'எதிர்க்கட்சிகளைப் பேசவிடுங்கள்' - அமைச்சர்களுக்கு கடிவாளம் போட்ட ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.