தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்த நிலையில் கடந்த ஆறு நாட்களக தொடர்ந்து பல இடங்களில் கனமழை பெய்து வருகின்றது. நேற்று காலையில் இருந்து கொட்டிய கன மழையால் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
சென்னை புறநகர் பகுதிகளில் கனமழை பெய்ததால் அடையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல்லாவரம் கவுல் பஜார் அருகே உள்ள தரைப்பாலம் மூழ்கியுள்ளது. பல்லாவரம் கவுல் பஜாரில் இருந்து கெருகம்பாக்கம், கொளப்பாக்கம்,முகலிவாக்கம் ராமாபுரம் போரூர் ஆகிய பகுதிகளுக்கு செல்வதற்காக அடையாற்றில் தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை புறநகரில் தொடர்ந்து பெய்த கனமழையால் அடையாற்றில் அமைக்கப்பட்டிருந்த தரைப்பாலம் முழுவதும் நீரில் மூழ்கியுள்ளது. இதனால் தரைப்பாலத்தில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் தரைப்பாலம் மூலமாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் சுமார் 8 கிலோமீட்டர்வரை சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. தரைப்பாலத்தில் தண்ணீர் வேகமாக செல்வதால் பொதுமக்கள் ஆபத்தான முறையில் பாலத்தை கடந்து செல்கின்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் தொடர் கனமழை; பள்ளிகளுக்கு விடுமுறை
!