ETV Bharat / state

சுதந்திர தின எதிரொலி: சென்னை விமான நிலையத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள 5 அடுக்கு பாதுகாப்பு முறை! - METAL DETECTOR

நாட்டின் 77வது சுதந்திர தின விழா கொண்டாட்டங்களையொட்டி சென்னை விமானநிலையத்தில், 5 அடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப்பட்டு, வரும் 20ஆம் தேதி நள்ளிரவு வரை அமலில் இருக்கும் என ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

சென்னை விமான நிலையத்தில் அமல் படுத்தப்பட்டுள்ள ஐந்து அடுக்கு பாதுகாப்பு முறை

author img

By

Published : Aug 2, 2023, 4:56 PM IST

சென்னை விமான நிலையத்தில் அமல் படுத்தப்பட்டுள்ள ஐந்து அடுக்கு பாதுகாப்பு முறை

சென்னை: இந்தியாவின் 77-வது சுதந்திர தின விழா வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த சுதந்திர தின விழா கொண்டாட்டங்களுக்காக ஒன்றிய உள்துறை அமைச்சகம் நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரித்துள்ளது. அதன்படி நாடு முழுவதும் உள்ள விமானநிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள், மக்கள் அதிகமாக கூடும் முக்கியமான ரயில் மற்றும் பஸ் நிலையங்கள் போன்ற பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து சென்னை விமான நிலையத்திலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டதன் ஒரு பகுதியாக 5 அடுக்கு பாதுகாப்பு முறை நேற்று இரவிலிருந்து அமல்படுத்தப்பட்டுள்ளது. சென்னை விமானநிலையத்திற்கு வரும் வாகனங்களை பிரதான நுழைவு கேட் பகுதியிலேயே நிறுத்தி, சந்தேகத்திற்கு உட்படும் வாகனங்களை பாதுகாப்பு படையினா் மோப்ப நாய் உதவியுடன் சோதனையிடுகின்றனா்.

அதைப்போல் வெடிகுண்டு நிபுணா்கள் மெட்டல் டிடெக்டா்கள்(METAL DETECTOR) மூலம் பரிசோதிக்கின்றனா். கூடுதலாக விமானநிலைய வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசாா் ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனா். விமானநிலைய மல்டி லெவல் காா் பாா்க்கிங்(MULTI LEVEL CAR PARKING) பகுதிக்குள் நீண்ட நேரமாக நிற்கும் காா்களை வெடிகுண்டு நிபுணா்கள் திவீரமாக சோதனையிட்டு விசாரிக்கின்றனா்.

அதைப்போல் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரின் அதிரடி வீரர்கள் மோப்ப நாய்களுடன், சென்னை விமான நிலையத்தின் அனைத்து பகுதிகளுக்கும் குறிப்பாக விமானங்கள் நிற்கும் பகுதிகளிலும் தீவிரமாக சோதனையிட்டு கண்காணித்து வருகின்றனர். சென்னை விமானநிலையத்தில் பாா்வையாளா்கள் வருகைக்கான தடை முன்னதாகவே கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ச்சியாக அமலில் இருப்பதால், அதை மேலும் தீவிரமாக செயல்படுத்துகின்றனா். இதுமட்டுமின்றி BCAS பாஸ்கள்(BUREAU OF CIVIL AVIATION) வழங்குவதிலும் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

இதனைத்தொடர்ந்து விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பகுதியிலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அப்பகுதியில் ஏற்கனவே உள்ள சிசிடிவி கேமராக்களுடன் தற்போது கூடுதலாக சிசிடிவி கேமராக்களை அமைத்து விமான நிலைய பாதுகாப்பு கட்டுப்பாட்டு அறையிலிருந்து 24 மணி நேரமும் தொடா்ந்து கண்காணிக்கின்றனா். மேலும் விமான பயணிகளுக்கும் பாதுகாப்பு சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பயணிகளுக்கு வழக்கமாக நடக்கும் சோதனைகளுடன், கூடுதலாக ஒரு முறை, விமானங்களில் ஏறும் இடத்திலும் பயணிகளுக்கான பாதுகாப்பு சோதனை நடத்தப்படுகிறது.

குறிப்பாக பயணிகள் கைகளில் எடுத்து வரும் கைப்பைகளை கூடுதல் கவனத்துடன் துருவித்துருவி சோதிக்கின்றனா். தற்சமயம் பயணிகளுக்கு திரவப்பொருட்கள், ஊறுகாய், அல்வா, ஜாம், எண்ணெய் பாட்டில்கள் போன்ற பொருட்கள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதைப்போல் விமானங்களில் சரக்கு பாா்சல்கள் ஏற்றும் பகுதிகளிலும் தீவிரமாக கண்காணித்து பாா்சல்கள் அனைத்தையும் பல கட்ட சோதனைக்குப்பின்பே விமானங்களில் ஏற்ற அனுமதிக்கின்றனா்.

விமானப் பயணிகளுக்கு கூடுதலாக சோதனைகள் நடத்தப்படுவதால் உள்நாட்டு பயணிகள் விமானம் புறப்படும் நேரத்திற்கு ஒன்றரை மணி நேரம் முன்னதாகவும், சா்வதேச பயணிகள் மூன்றரை மணி நேரத்திற்கு முன்னதாகவும் வருவதற்கு சென்னை விமானநிலைய அதிகாரிகள் பயணிகளை அறிவுறுத்தியுள்ளனா். சென்னை விமானநிலையம் முழுவதும் முழு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி நள்ளிரவு வரை இந்தப் பாதுகாப்பு விதிமுறைகள் அமலில் இருக்கும் என்றும்; தற்போதைய 5 அடுக்கு பாதுகாப்பு வரும் 13, 14, 15ஆகிய தேதிகளிலும், விரைவில் உச்சகட்ட பாதுகாப்பான 7 அடுக்கு பாதுகாப்பு முறை அதிகரிக்கப்படும் என்றும் விமானநிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: குடியரசுத் தலைவருடன் எதிர்க்கட்சித் தலைவர்கள் சந்திப்பு.. பிரதமர் மணிப்பூர் செல்ல வலியுறுத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.